திருவாவடுதுறை ஆதீனம்

பதினாறு முதல் இருபதொன்று குருக்கள் சரித்திரம்

பதினாறாவது சுப்பிரமணிய தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

ஆசிரிய விருத்தம்

 

திருமணியை நிறத்தமைத்த நீன்மணிமெய்ம்

மால்பிரமன் றேடிக் காணா

வருமணியயன் னையும்பொருளா வாண்டசிந்தா

மணியன்ப ரகத்தே மேய

வொருமணியம் பலவாண சிரோமணிகண்

மணியடிமை யுவர்ந்தார் கண்ணுட்

கருமணிவண் டுறைசையிற்சுப் பிரமணிய

குருமணியைக் கருத்துள் வைப்பாம்.

துன்னியபஞ் சாக்கரதே சிகர்க்கீரெட்

டாகியபிற் றோன்றலாகித்

தன்னிகரி லடியவருக் கமுதாகித்

தாயாகித் தந்தையாகி

மின்னியநன் னிதியாகிப் பதியாகித்

துறைசைநகர் விளங்கவென்றும்

மன்னியசுப் பிரமணிய குருமணிதன்

மருமலர்த்தா ளிணைகள் போற்றி.

 

கட்டளைக் கலித்துறை

 

நிருவாண தீக்கையுஞ் செய்து பவத்துயர் நீக்கியயனை

யயாருவாச் சிவானந்த வாழ்வினி லுய்த்த வுயர்துறைசைத்

திருவார் குருசுப் பிரமணி யப்பெயர்த் தேசிகன்றன்

மருவார் மலரடி யுள்கி வழுத்தி வணங்குவனே.

ஸ்ரீ சிதம்பர ஞானமா நடராச உபாசனா மடாலயமாயும், தமிழ்வேத பாராயண உறையுளாயும், சகலகலா நிலையமாயும், விளங்காநின்ற திருக்கயிலாய பரம்பரைத் திருநந்திதேவ பரமாசாரிய சந்தான குருபீடமான, திருவாவடுதுறை ஸ்ரீ பஞ்சாக்கர தேசிகர் ஆதீனத் திருமரபில் அத்தேசிகோத்தமருக்குப் பதினைந்தாவது பிற்றோன்றலாக எழுந்தருளியிருந்த அம்பலவாண தேசிகர்பால் சைவசந்நியாசமும், மூவகைத் தீக்கையும், ஆசாரியாபிடேகமும் சுப்பிரமணியன் என்னும் சிறப்பபிதானமும் பெற்றுத் துவிதீய ஆசிரியராக வீற்றிருந்தருளும் ஞான தேசிகர், தமது ஞானாசிரிய சுவாமிகள் திருவடியிணை மலர்களை சிந்தித்துக்கொண்டு திருவாவடுதுறையில் சீடர்களுக்குத் தீக்கைபுரிந்து சைவ சித்தாந்த சாத்திரோபதேசமுஞ் செய்து வீற்றிருந்தருளவாராயினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், பாண்டிய நாட்டிலே திருநெல்வேலியயன்னும் திருநகர்க்கு மேற்றிசையிலுள்ள பேட்டை என்னும் பெயரிய பதியின்கண் சைவ வேளாளர் குலத்தில் அவதரித்தவரும் நச்சாடலிங்கரென்னுந் திருநாமமுடையவரும், சிறிய பிராயத்திலே தம்பால் வந்து சைவசந்நியாசமும் சமய விசேட தீக்கைகளும், மந்திர காஷாயமும் பெற்றவரும், தமது ஞானாசிரிய சுவாமிகளால் நிருவாண தீக்ஷையும் ஞானபூசையும் நமசிவாயன் என்னும் தீக்ஷாநாமமும் பெற்றவரும், தீவிரதர பக்குவம் முற்றப்பெற்றவரும் ஆகிய ஒரு தம்பிரான் சுவாமிகளுக்கு, பிரமோதூத வருடம் சித்திரை மாதத்தில் ஓர் சுப தினத்திலே ஆசாரியாபிடேகமுஞ் செய்து தமக்குத் துவிதீய ஆசிரியராக வைத்தருளினர்.

 

அச்சுபதினத்தில் ஆதீன வித்துவான் திரிசிரபுரம்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்

ஞானதேசிகர்மீது ஐந்து திருவிருத்தம் இயற்றித் துதித்தனர்

அவை வருமாறு :

 

உரவுபொலி மறைமுடியாஞ் சிவக்கொழுந்தைப்

பரானந்தத் துவாவை நாளுங்

கரவுதவி ரன்பருளத் தகலாம

லமுதூற்றுங் கருணை வாழ்வைப்

புரவுமலி மெய்ஞ்ஞான வாரிதியைத்

துறவரசைப் பொருவி லாத

பரவுபுகழ்த் துறைசையிற்சுப் பிரமணிய

குருமணியைப் பரவி வாழ்வாம்.

 

செல்லார்க்கும் பெருமுழக்க மண்முழக்க

மென்மேற்போய்த் திகழ்மா டத்தாற்

சொல்லார்க்குங் கழனிகளாற் றொலையாத

வளங்காட்டுந் துறைசை மேவிக்

கல்லார்க்கு மல்லார்க்கும் வல்லார்க்கும்

வல்லார்க்குங் கணக்கி லாமற்

றெல்லார்க்கு மெய்ப்பில்வைப்பாஞ் சுப்பிரம

ணியகுரவ னிருதாள் போற்றி.

 

ஒப்புயர்வில் லவன்சிவன்மூன் றும்முடைமை

யாலிரண்டு மொன்று மேற்றார்

தப்பறத்தாழ்ந் தவரெனறேர்ந் தனந்திருவா

வடுதுறைநற் றலத்துள் வார்தம்

வைப்பனைய சுப்பிரம ணியகுரவன்

றன்பெயரை வகித்து ளாரை

யயப்படியும் விலக்கலின்மற் றிவன்மூன்று

மிலனென்றே யியம்பு வோமே.

 

மாமேவு புகழ்த்திருவா வடுதுறைசுப்

பிரமணிய வள்ள லாய

தூமேவு குரவன்பேர் சொற்றவுட

னென்பிறப்புத் தொலைந்ததம்மா

பாமேவு மிதுகண்டும் பிறப்பொழிப்பா

னிவனென்று பலருஞ் சொல்வார்

தேமேவு நலந்தெரியயன் வாயினையே

புகழாத செய்கை யயன்னே.

 

தேடுகயி லாயபரம் பரைத்துறைசை

மேயநமச் சிவாயன் றன்னைக்

கூடுதன்முன் னுள்ளபதி னால்வருமுற்

றோன்றலெனக் கொண்டா ரவ்வா

றூடுதவிர் தரக்கொண்டும் பிற்றோன்ற

லெனவுங்கொண் டுவக்குங் கோமான்

நீடுபெரும் புகழமைசுப் பிரமணிய

குருமணியை நினைந்து வாழ்வாம்.

 

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிகசுவாமிகளுக்கு மூவகைத் தீக்ஷாவிதிகளையும், ஆசாரியாபிடேகவிதி முதலியவைகளையும் முறையாக கற்பித்தருளினர். அன்றியும் மெய்கண்ட சாத்திரம் பண்டார சாத்திரங்களில் இலைமறைகாய்போல் இலங்கும் நுண்பொருள்கள் தெளிதரச் செய்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், பாண்டிய நாட்டின்கண்ணும் சேர நாட்டின் கண்ணும் உள்ள தமது சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்யத்திருவுளங்கொண்டு, ஓர் சுபதினத்தில் மூலசற்குருவாகிய நமச்சிவாய மூர்த்திகளுக்கு விசேடபூசைசெய்து வழிபட்டு பூர்வசாம்பிரதாயப்படி தமது ஞானாசிரியசுவாமிகள் திருவடியிணைமலர் தோயப்பெற்ற தகமைபொருந்திய அப்பாதுகைகளை தமது சிரசின்மேற்கொண்டு தண்டிகையின் மேல் எழுந்தருளப் பண்ணி, பின்பு தாம் அதிலிவர்ந்து துவிதீய ஆசிரியராகிய நமச்சிவாய தேசிகசுவாமிகளும், தம்பிரான்  சுவாமிகளும், ஏனைய அடியவர்களும், பரிசனங்களும் உடன்வர அங்கு நின்றும் அரிதினீங்கி, வழியிடையிற்பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு ஆளுடையார்கோயிலென வழங்கும் திருப்பெருந்துறையை யடைந்து ஆன்மநாதரையும், யோகாம்பிகையையும், குருந்த மூலநாதரையும், மணிவாசகப் பெருமானையும் தரிசித்து வழிபாடியற்றித் தமது மடாலயத்தை யடைந்து பின்வேலப்பதேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து அங்கு சிலநாள் வசித்திருந்து, பின் அத்தலத்தினின்றும் அரிதினீங்கிக் கானப்பேரூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருப்பூவணம் என்னும் திவ்வியதலத்தினையடைந்து சிவபிரானைத் தரிசனஞ்செய்து ஐந்தெழுத்துக் குருநாதனுக்கு ஐந்தாவது பிற்றோன்றலாகிய வேலப்பதேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து, மதுரைப்பதியயன வழங்கும் திருவாலவாய் என்னும் திருநகரை நண்ணித் திருக்கோயிலிற்சென்று, சித்தி விநாயகரையும், ஆலவாயடிகளையும், அங்கயற்கண்ணம்மையையும் தரிசித்து தமது திருமடத்திற்கெழுந்தருளி உருத்திர கோடிதேசிகர் குருமூர்த்தந்தரிசனம்பண்ணி அங்கமர்ந்து மாகேசுரபூசை முதலானவை அன்பர்களியற்றத் தாம் பவனி வந்து யாவருக்குங் குரு தரிசனக்காட்சி நல்கி, அங்கு சிலநாள் வசித்திருந்து, பின் திருப்பரங்குன்றம் முதலிய தலங்களைத் தரிசித்து சங்கரநாராயணர் கோயிலையடைந்து, திருத்தளியிற் சென்று சங்கரமகாலிங்கத்தையும், கோமதிநாயகியையும் சங்கர நாராயணரையும் தரிசனஞ் செய்து, பின் தமது மடாலயத்தைச் சேர்ந்து பஞ்சாக்கரசற்குருபரர்க்குப் பத்தாவது பிற்றோன்றலாகிய வேலப்பதேசிகர் குருமூர்த்தந் தரிசித்து வழிபாடியற்றி அத்தலத்திற் சிலநாள் வசித்திருந்து பின் அங்கு நின்றும் அரிதினீங்கிக் கடையநல்லூருக்குச் சென்று, பஞ்சாக்கரதேசிகருக்குப் பதின்மூன்றாவது பிற்றோன்றலாகிய அம்பலவாணதேசிகர் திருவவதாரஞ்செய்தருளிய கிருகமாகிய அத்திவ்விய திருவீட்டினைச் சார்ந்து திருவாசலிற் பணிந்து உள்ளேசென்று ஆசனத்தமர்ந்து, யாவருக்குங் குருதரிசனக் காட்சியளித்தருளினர். பின்பு அங்கு நின்றும் புறப்பட்டுத் திருக்குற்றாலத்திற்கெழுந்தருளி, சித்திராநதி நீராடிச் சிவாலயத்திற் சென்று சுவாமிதரிசனஞ் செய்து, பின் தமது மடாலயத்தைச் சார்ந்து துவிதீய ஆசிரியராகிய முத்தம்பலவாண தேசிகர் குருமூர்த்தந்தரிசித்து அங்கு சிலநாள் அமர்ந்தருளினர்.

பின்பு, ஞானதேசிகர் அங்கு நின்றும் புறப்பட்டு பாவநாசம் என்னும் பதியை அடைந்து பொருநைநதி நீராடித் திருக்கோயிலிற்சென்று முக்களாலிங்கரையும், உலகம்மையையும் தரிசித்துத் தமது ஈசான மடத்தில் வசித்திருந்து செவந்தி புரத்திற்கு எழுந்தருளி குருக்ஷேத்திரம் காறுபாறு வேணுவனலிங்கத் தம்பிரான் சுவாமிகள், மாகேசுர பூசைசெய்து வழிபட குருதரிசனக் காட்சி நல்கி, அங்கு நின்றும் புறப்பட்டு கல்லிடைக் குறிச்சியின் வடபாங்கருள்ள திருத்தளிச் சேரியைச் சேர்ந்து திருக்கோயிலிற் சென்று மானேந்தியப்பரையும், வடிவாம்பிகையையும் தரிசித்து, தமது திருமடத்திற்கு எழுந்தருளி துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதி தேசிகர் குருமூர்த்தந் தரிசித்து யாவருக்குங் குருதரிசனக் காட்சி நல்கி, துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிக சுவாமிகளுடன் அங்கு சில நாள் அமர்ந்திருந்து அங்கு நின்றும் புறப்பட்டு திருநெல்வேலிக்கு எழுந்தருளி பொருநைநதி நீராடி நித்திய கன்மானுஷ்டானஞ் செய்து திருவுருவமாமலை என்னுந் திருத்தளியிற் சென்று குகப்பெருமானை தரிசித்து அங்கு நின்றும் அரிதினீங்கி வேணுவனநாதரையும், காந்திமதி அம்மையையும், தாம்பிரசபா நாயகரையும் திருக்கோயிலிற் சென்று தரிசித்து, தமது ஈசான மடாலயத்தைச் சேர்ந்து, அங்கு அன்பர்கள் மாகேசுர பூசை செய்து வழிபட தாம் பவனிகொண்டு, குருதரிசனக் காட்சி நல்கி வழியிடையில் தமது மடாலயங்களில் தங்கியிருந்து திருச்செந்தூர் என்னும் திவ்விய தலத்தை அடைந்து குகப்பெருமானைத் தரிசனஞ்செய்து அங்கு சில நாள் வசித்திருந்து அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையில் உள்ள தமது மடாலயங்களில் சென்று அவ்வவ்விடங்களில் வசித்திருந்து, வள்ளியூரை அடைந்து திருக்கோயிலிற்சென்று சண்முகப் பெருமானைத் தரிசனஞ்செய்து தமது ஈசான மடாலயத்தை அடைந்து அங்கு வசித்திருந்து, கன்னியாகுமரியயன்னும் பதியினைச் சார்ந்து தீர்த்தமாடித் திருக்கோயிலிற் சென்று பகவதி அம்மையைத் தரிசித்து தமது ஈசான மடாலயத்திற் சென்று அங்கு வசித்திருந்து, பின்னர் சுசீந்திரத்திற்கு எழுந்தருளி திருக்கோயிலெய்தி சிவபிரானைத் தரிசித்து தமது ஈசான மடாலயத்தைச் சார்ந்து அங்கு பிரதிட்டாமூர்த்தியாக திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் பஞ்சாக்கர சற்குருமூர்த்தியைத் தரிசித்து பின் இரு குமாரசாமித் தேசிகர் குரு மூர்த்தங்கள் பணிந்திறைஞ்சி அங்கு பக்குவச் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்துகொண்டு சிலநாள் அமர்ந்திருந்தனர்.

அந்நாளில் திருவனந்தபுரத்தில் அரசு வீற்றிருந்த ஆயிலிய மகாராஜா என்பவர் தம் ஆஞ்சையினால் பிரதானிகள் சிலர், ஞானதேசிகர் பால் வந்து வணங்கித் தமது அரசமாநகருக்கு எழுந்தருளுமாறு வேண்ட, ஞானதேசிகர் அதற்குத் திருவுளமிசைந்து சுசீந்திரத்தினின்றும் புறப்பட்டு வழியிடையில் ஆங்காங்கு பிரதானிகள் எதிர்கொண்டு வழிபட்டு மாகேசுவரபூசை முதலாயின நடாத்தத் திருவுளத்துவகையயய்திச் சென்று, திருவனந்தபுரத்திற்கு எழுந்தருளி அங்கு அரண்மனைக்கணித்தான ஓர் அலங்கார மாளிகையில் அமர்ந்தருளினர்.

அங்கு அரசர், தம் ஆணைமேற்கொண்டு மந்திரி முதலாயினோர் மாகேசுரபூசை சிறப்புறச் செய்து ஞானதேசிகரை வணங்கி அரண்மனைக்கு எழுந்தருளுமாறு வேண்ட, ஞானதேசிகர் அதற்குத் திருவுளமிசைந்து, சிவிகைமீது ஆரோகணித்துத் துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிகர் மற்றோர் சிவிகையில் வழக்கப்படி பின்னேவர, தாம் சிவன் கோயிலிற் சென்று சிவபெருமானைத் தரிசித்து அங்கு நின்றும் அரிதினீங்கி விஷ்ணு கோயிலுக்கு எழுந்தருளி பத்மநாத சுவாமியைத் தரிசனம் செய்து அங்கு நின்றும் புறப்பட்டு அரசரது அரண்மனை வாயிலை அணுகுதலும் அரசர் தாம் உபய ஞானாசிரிய சுவாமிகளையும் எதிர்கொண்டு, உள்ளே அழைத்துச் சென்று, பொற்பீடத்தில் எழுந்தருளச் செய்து உபசரிப்ப, ஞானதேசிகர் அவ்வரசர்க்கு ஆசீர்வதித்து இனிய வசனங்களால் அவர் தாம் மகிழ்தரச் செய்தருளினர். அரசர் அன்பு கூர்ந்து உபய ஞானாசிரிய சுவாமிகளுக்கும் தனித்தனி சிவிகையும், பொற்குடை முதலாகிய வரிசைகள் பிறவும் வழங்கி அவ்வரசமாநகரின்கண் பலவகைக் காட்சிகளோடு பவனி கொண்டருளச்செய்வித்து, மேலும் வேண்டுவன யாவுங் குறைவறமுடித்து, ஞானதேசிகர் பால் விடைபெற்றுக்கொள்ள, அக்குருபரர் அங்கு நின்றும் புறப்பட்டு சுசீந்திரத்தையடைந்து அங்கு சில நாள் வசித்திருந்து அங்கு நின்றும் அரிதினீங்கிக் கல்லிடைக்குறிச்சியின் வடபாங்கருள்ள திருத்தளிச்சேரியை யடைந்து சில நாள் அங்கமர்ந்திருந்து, துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிகசுவாமிகளை அவ்விடத்தமர்ந்து அன்பர்களுக்கு அருளுபதேசஞ் செய்யுமாறு பணித்துத்தாம் அங்கு நின்றும் புறப்பட்டுத் திருவாவடுதுறையை யடைந்து தமது மடாலயத்திற் கெழுந்தருளி ஞானமூர்த்தியாகிய நமச்சிவாய தேசிகோத்தமருக்கு நித்திய நைமித்திகபூசை சிறப்புறவியற்றி வழிபட்டுக்கொண்டு தம்பாற் சரண்புகும் அன்பர்களுக்குச் சிவதீக்கை முதலானவை செய்தங்கமர்வாராயினர்.

அக்காலத்தில் தமது ஆதீன மகாவித்துவானாக அங்கமர்ந்து கல்வி போதித்து வருவாராகிய திரிசிரபுரம் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையயன்பவர், ஞானதேசிகர் மீது நெஞ்சுவிடுதூது வென்னும் பிரபந்தத்தை யியற்றி அத்தேசிகர் திருமுன்பு அரங்கேற்றினர். பின்பு சிலபகல்சென்று அவருக்கு ஞான தேசிகர் ஆன்மார்த்த படிகலிங்கபூசை எழுந்தருளப்பண்ணி பூசித்து வருமாறு செய்தருளினர். அப்பொழுது அவர் ஞானதேசிக சுவாமிகள் மீது நூறு செய்யுட்களாலாகிய ஒருபாமாலை இயற்றித் திருச்செவி சாத்தி திருவருள்பெற்றுய்ந்தனர். பின்பு அவர் தம்பாற் தமிழ்க் கல்விபயின்ற தம்பிரான் சுவாமிகளில் ஒருவராகியும், துறவறத்திற் சுகமுனிவரை யயாத்தவராகியும், குமரகுருபர முனிவர் குலமரபினராகியும் விளங்கிய குமாரச் சாமித் தம்பிரான் சுவாமிகள், ஆதீன குலதெய்வமென்று யாவராலும் துதிக்கப்பெறும் திராவிடமாபா´ய கர்த்தராகிய மாதவச் சிவஞான சுவாமிகள் வரலாறு பத்தியமாகப்பாடித் தருகவென வேண்ட அப்பாடிய முனிவர் வரலாற்றைப் பாங்கு பெற வைத்து விரிவகையால் தாம் பாடிவரும் நாட்களில் நம் தமிழுலகம் செய்த தவக்குறையானே அதுதான் முற்றுப்பெறாமல் இருப்பவிட்டுச் சிவபதமெய்தினர்.

அக்காலத்தில் ஞானதேசிகர், தாதுவருடத்திய துலா மாதத்து நிகழும் சூரிய கிரகணத்தில் தீர்த்த ஸ்நானம் செய்தற்கு மாயூரத்திற்கு எழுந்தருளி காவிரிநதியின் தென்கரைப் பாங்கர் ஒரு மண்டபத்தில் எழுந்தருளியிருந்தனர். அத்தருணத்தில் மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை என்னும் பெயரிய ஒருவர் ஞானதேசிகரைத் தரிசித்து இரண்டு செய்யுட்கள் இயற்றித் துதித்தனர்.

அவைவருமாறு :

வெண்பா

 

குகுவுங் கிரகணமுங் கூடலாற் கங்குன்

மிகுமென் றுளமே வெருவ ‡ னகுதுறைசைச்

செப்பரிய மாச்சுப் பிரமணிய தேசிகனா

மப்பரிதி யீங்குதித்த லால்.

 

விருத்தம்

 

மாதவச்சுப் பிரமணிய தேசிகமே

லோயுவர்ப்பு வாரி மூழ்கு

மாதவன்கீழ்த் திசையுதிக்குஞ் சுடுமணுகு

மதியழிக்கு மத்த மிக்குஞ்

சாதகமேற் றிசையுதிப்பாய் நிழலளிப்பாய்

மதியளிப்பாய் தவாம னாளும்

பேதகுணக் கடல்படிவா யத்தமியாய்

நினைக்கதிரோன் பொருவா னன்றே.        ( 2 )

 

பின்பு ஞானதேசிகர் காவிரிநதி நீராடி திருக்கோயிலிற் சென்று மாயூரநாத சுவாமியையும், அபாயம்பிகையையுந் தரிசித்துத் தமது திருநகர்க்கு எழுந்தருளினர். அக்காலத்தில் வற்கடம் மிகுந்து மாநிலத்தின்கண் மன்பதை வருத்தமுறுவதை ஞானதேசிகர், திருவுளத்து ஆராய்ந்து அங்குள்ள யாவருக்கும் பசிப்பிணி தீரும்படி அன்னம், ஆடை முதலியவைகள் கொடுத்து வந்தனர். அதனை உணர்ந்த முனிசீப் வேதநாயகம் பிள்ளை என்பவர் திருவாவடுதுறைக்கு வந்து ஞானதேசிகரைத் தரிசித்துச் சில செய்யுட்கள் செய்து துதித்தனர்.

அவைவருமாறு :

 

கட்டளைக் கலித்துறை

 

நேரொன்று  மில்சுப் பிரமணி யாதிப நின்னைப்பல்லோர்

காரென்று சொல்வரக் காரும்வஞ் சித்தவிக் காலத்திலே

யூரென்றும் வாழ வறுசுவை யுண்டி யுதவியுன்றன்

பேரென்றும் நிற்கச்செய் தாயுனைக் காரெனல் பேதைமையே.            ( 1 )

 

நிசியோடத் தோன்றுந் தினகரன் போலவிந் நீணிலத்தோர்

பசியோடப் பஞ்சம்பஞ் சாய்ப்பறந் தோடப் பதார்த்த மெலாஞ்

சுசியோ டளித்துப் புகழ்மே வினனற் துறைசையில்வாழ்

சசியோடு நேர்முக சுப்பிரமணிய தயாநிதியே.                    ( 2 )

 

தடையில் கொடைச்சுப் பிரமணி யையநிற் சார்ந்தவர்கொள்

கொடையை யவர்சொல வேண்டுங்கோ லோவவர்குக்கி சொலு

மிடைசொலுங் கண்டமுங் காதுஞ்சொலுமிறு மாப்புடைய

நடைசொலுங்கையிற் குடைசொலும் வேறென் நான் சொல்வதே.        ( 3 )

படிபடிபாகப்பொன் கொட்டிநெற் கொள்ளுமிப்பஞ்சத்திலே

பிடிபிடி யாக மணியுங் கனகமும்  பெட்புறுவோர்

மடிமடி யாக்கட்டிச் செல்லத்தந் தான்பெரு வள்ளலென்றே

குடிகுடி யாகத் தொழுஞ்சுப்ர மண்ய குணாகரனே.  ( 4 )

 

பானு நிகர்சுப் பிரமணி யாரிய பல்லுயிரை

வானு மறந்தவிந் நாள்சோ றுடைபொன் மடிசுரந்து

தேனுவை நீவென்ற தாலா வடுதுறைச் செல்வப்பெயர்

தானுன் பதிக்குத் தகுந்தகுங் காணிது சத்தியமே.          ( 5 )

 

அம்மையு மத்தனு மாஞ்சுப்ர மண்ய வனகனைத்தான்

கம்மை நிதிகொள் கவிஞர்க ணாளுந் துதிப்பதல்லா

லிம்மையி லோர்பொருள் வேண்டாத நாமு மினிதுவந்து

செம்மை யவன்குணம் வாழ்த்துவ மேலவன் சீர்த்தியயற்றே.      ( 6 )

 

மாமேக நீரொன்றை யேதருஞ் சுப்ர மணியப்பெயர்ப்

பூமேக மன்னமுஞ் சொன்னமு மின்னமும் பூண்டுகிலும்

மீமேக முட்டும் வளமாடம் பூமி விடைபசுவுந்

தோமேக வேதமு நீதமும் போதமுந் தூவிடுமே.                 ( 7 )

 

எரியயாத்த பஞ்ச மிடங்கரை யயாத்த திடங்கர்பற்றுங்

கரியயாத் தனபல் லுயிர்க ளெல்லாமக் கராமடிக்க

வரியயாத் தனன்சுப் பிரமணி யைய னரிசக்கரஞ்

சரியயாத் தனவவ னீந்திடும் பொன் வெள்ளிச் சக்கரமே.  ( 8 )

 

வானென் றுதவ வருஞ் சுப்பிர மண்ய வரோதயனே

தானென்று வெண்ணரன் பாடையிந் நாட்டிற் றலையயடுக்க

வேனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க

நானென்று கங்கணங் கட்டிக்கொண் டாயிந்த நானிலத்தே. ( 9 )

 

பின்பு, முனிசீப் வேதநாயகம் பிள்ளை ஞானதேசிகர்பால், விடைபெற்றுத் தமது ஊருக்குச் சென்று உவப்பத் தலைக்கூடியுள்ளப் பிரிதல், என்னுந் திருவாக்கிற்கு இலக்கியமாக திகழுந் தமது உழுவலன்பினால் அவர் ஞானதேசிகருக்கு இரண்டு செய்யுட்கள் இயற்றி அனுப்பினர்.

அவைவருமாறு :

 

சுருதியோ ருருக்கொண் டன்ன சுப்பிர மணிய தேவே

கருதியின் னொருகா னின்னைக் காணலா மெனும் வாவாற்

பொருதியயன் மனம்பின் னீர்க்கப் பொறையுறு பண்டி பூட்டு

மெருதுகண் முன்னே யீர்க்க வென்பதி யடைந்தேன் மன்னோ.           ( 1 )

 

சூர்வந்து வணங்கு மேன்மைச் சுப்பிர மணிய தேவே

நேர்வந்து நினைக் கண்டு நேற்றிராத் திரியே மீண்டென்

னூர்வந்து சேர்ந்தே னென்ற னுளம்வந்து சேரக் காணே

னார்வந்து சொலினுங் கேளேனதனையிங் கனுப்பு வாயே. ( 2 )

பின்பு, உலகிற் பேதியயன்று வழங்குங் கொள்ளைநோய் மிகப் பரவி வருதலைநோக்கி அவ்வேதநாயகம் பிள்ளை ஞானதேசிகரை அடைந்து தரிசித்து உலகில் அந்நோய் நீங்குமாறு கருதிப் பிரார்த்தித்து ஒரு செய்யுள் இயற்றித் துதித்தனர்.

அச்செய்யுள் வருமாறு :

கட்டளைக் கலித்துறை

 

இலக்கண மெய்க்கரை மாத்திரை யாமிவ் வளவுமின்றி

மலக்கண் விளை பிணி யாற்பலர் மாய்ந்தனர் மண்டுமிந்நோய்

விலக்க வருள்புரி மும்மல நோய்கெட வித்தகனாய்

நிலக்க ணமர்சுப் பிரமணி யாநந்த நின்மலனே.

 

அன்றியும் அவர் ஆதீன வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவருடன் கலந்து பேசிக் கொண்டிருக்கும் ஓர் தருணத்தில் இரண்டு செய்யுட்கள் இயற்றி ஞானதேசிகருக்கு அனுப்பினர்.

அவைவருமாறு :

கட்டளைக்கலித்துறை

 

இல்வாழ்வை நீத்தற மேற்கொண்ட நீபிறரில்லகத்துச்

செல்வாழ்வு சற்றும் விரும்பா யயன்பாரிது சித்திரமே

புல்வாழ் வுடையயன்றன் வீடெங்கு நீபரி பூரணனாய்

நல்வாழ்வுற் றாய்சுப் பிரமணி யாநந்த நற்றவனே.

ஆசிரியவிருத்தம்

 

விதியிருந்த பதியயனுஞ்சுப் பிரமணிய

தேசிகமெய்ஞ் ஞானக் குன்றே

துதியிருந்த நின்புலவன் சொல்வழியே

பல்வழியுந் தோன்று நீயயன்

மதியிருந்தாய் பிரிந்திடவு மனம்பொருந்தா

யயன விருந்தேன் வான்கோமுத்திப்

பதியிருந்தா யயனவந்த மாபுலவன்

பொய்சொலவும் படித்தான் மன்னோ.

 

பின்பு சிலகாலஞ்சென்று ஞானதேசிகர், தாம் மதுரைமாநகரின் கண்ணுள்ள சைவநேயர்கள் வேண்டுகோளுக்கு இயைந்து திருவாலவாய்ச்  சிவன்கோயில் கும்பாபிடேகத் தரிசனத்தின் பொருட்டு அங்கெழுந்தருளத் திருவுளங்கொண்டு, அவ்வாறே ஓர் சுபதினத்தில் ஆவினருங் கன்றுறையும் ஆவடுதண்டுறையினின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்து மதுரைமாநகரை அடைந்தருளினர். அந்நாட்களில் ஞானதேசிகர் கட்டளையிட்டருளிய வண்ணம் துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிக சுவாமிகள்,  திருத்தளிச் சேரியினின்றும் புறப்பட்டு மதுரைமா நகரையடைந்து தமது ஞான தேசிகர் எழுந்தருளியிருக்குந் திருமடநிலவுந் திருவீதியினை அணுகிச் சிவிகையினின்றும் இறங்கி வீதியில் நடந்துசென்று அத்திருமடத்தைச் சார்ந்து ஞானதேசிகரை விதிப்படிதரிசித்து அங்கமர்ந்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், கும்பாபிடேக சுபதினத்தில் துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகளோடு திருக்கோயிலுக்கு எழுந்தருளி, கும்பாபிடேகத் தரிசனஞ்செய்து புறத்தே வந்து, தமது திருமடத்தில் எழுந்தருளியிருந்தனர். பின் சில நாட்கழித்து அங்கு நின்றும் அரிதினீங்கித் திருப்பரங்குன்றத்திற்கு எழுந்தருளி, சுவாமி தரிசனஞ்செய்து அங்கு நின்றும் புறப்பட்டு திருநெல்வேலியைச் சார்ந்து அங்கு திருக்கோயிலுக்கு எழுந்தருளி சிவபிரானைத் தரிசனஞ் செய்து தமது ஈசான மடாலயத்தை அடைந்து அங்கு சிலநாள் வசித்திருந்து அங்கு நின்றும் புறப்பட்டு கல்லிடைக்குறிச்சியின் வடபாங்கருள்ள திருத்தளிச்சேரியை அடைந்து திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து தமது திருமடத்திற்கு எழுந்தருளி துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதிதேசிக சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்கமர்ந்து அருளுவாராயினர். அங்ஙனம் அமர்ந்தருளிய ஞானதேசிகர், அற்றை நாளிரவில் பவனிவந்து துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகளால் அதிவிசித்திரமாக செய்தருளிய அத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து குருதரிசனக் காட்சி கொடுத்தருளினர்.

பின்பு சிலநாள் கழித்து ஞானதேசிகர் அங்கு நின்றும் புறப்பட்டு செவந்திபுரத்திற்கு எழுந்தருளி, அங்கு வேணுவனலிங்க சுவாமிகளால் அதிவிசித்திரமாகப் புதிதாக சமைப்பித்துச் சுப்பிரமணிய விலாசமென ஞானதேசிகர் திருநாமமிட்டு வழங்கப் பெறுவதாகிய அத்திருமடத்தில் வீற்றிருந்து யாவருக்குங் குருதரிசனக் காட்சி அளித்தருளினர். அத்தருணத்தில் அங்கு கூடி புலமை மிக்க தம்பிரான் சுவாமிகளும் ஏனையோர்களும் ஞானதேசிகர் தம் திருவுளத்துற்ற பெரு மகிழ்ச்சியைகண்டு கழிபேருவகையயய்தித் துதித்துப் பாடினர்.

அங்ஙனம் தமிழ்ப் புலமைவாய்ந்த தம்பிரான் சுவாமிகளும் ஏனையோரும் பாடிய பாடற்றிரட்டினை சுப்பிரமணிய தேசிகர் விலாசச் சிறப்பென பெயர் வழங்குவர். அங்ஙனம் அவர்கள் பாடிய பெற்றிமை விளங்க ஆதீன மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களின் முதல் மாணாக்கரும் கும்பகோணம் புரோவின்சியால் கல்லீஜ் தமிழ் பண்டிதருமாகிய தியாகராஜ செட்டியார் அவர்கள் இயற்றிய செய்யுட்கள்.

 

பூமேவு பொழில்புடைசூழ் புகலிவரு

கவுணியர்புண் ணியத்தின் சீர்சா

னாமேவு திருவாக்கா லமண்மாசு

கழுவியயாளிர் நலத்த தாய

தூமேவு நீறணிந்து கண்மணிமா

லிகையயன்றுந் துலங்கப் பூண்டு

பாமேவு புகழ்படைத்த பெருஞ்செல்வர்க்

கிடமாய பாண்டி நாட்டில்.          ( 1 )

 

பாரேந்து மணிச்சுடிகைப் பன்னகவேந்

தன்புலவோர் பரிந்து போற்றும்

பேரேந்து வித்தியா ரணியமுனி

முதலாய பெரியர் யாரு

நாரேந்து தன்வயிற்றோன் றப்பெறா

மைக்குள்ள நாண வோங்கு

மேரேந்து சீரேந்து விக்கிரம

சிங்கபுர மெனுந்த லத்தில்,                       ( 2 )

 

விதியரியே முதலாயோர் பசுக்களே

வொழிவிலின்ப வீடு நல்கும்

பதிபரம சிவகுருவே யயன்றியாருந்

தெளிந்துய்யப் பாடி யஞ்செய்

துதிபெருகு சிவஞான முனிவரர்தம்

பெருமானார் தோன்றப் பெற்ற

முதியபெருந் தவம்புதுக்கு மாறுவேண்

டியலோடு முளைத்த சீலன். ( 3 )

 

அருள்வாய்மை தவமுதல விரதங்கள்

பல்லுறுப்பா வமைய லோங்குந்

தெருண்ஞான மேதிரண்டு விளங்குதிரு

வுருவாகச் சிறந்த மேலோன்

மருண்மேவ லொழிதருசித் தாந்தசைவ

நிலையயன்று மருவி நின்ற

பொருண்மேவு முயர்புநிதன் றனையடைந்தோர்க்

கந்நிலையே யுணர்த்து நல்லோன்.         ( 4 )

 

மருத்துறைசேர் தான்றோன்று பதியிலா

லயம்விளங்க வகுத்த தன்கட்

டிருத்துறைசை யாதீன குலதெய்வ

மெனுநாமஞ் சிறக்கப் பூண்டெங்

கருத்துறையா டியமுனிவர் திருவுருவென்

றுங்கவினக் கண்டு தாபித்

தெருத்துறையும் பரனடியார் திருவுளமே

தனக்கிடமா வியைய வாழ்வோன்.  ( 5 )

காணுவன பரமகுரு நாதனருட்

டிருவுருவே கனிபே ரன்பிற்

பூணுவன வனையனலர்ப் பூங்கழலே

யயஞ்ஞான்றும் புகலக் கேட்கப்

பேணுவன வனையனுயர் பெரும்புகழே

யயன்றுளத்திற் பிறங்கக் கொண்டோன்

வேணுவன லிங்கமுனி வரர்பிரா

னெனுநாம மேவப் பூண்டோன்.             ( 6 )

 

தண்ணியநீ றணிந்துயர்கண் மணிபுனைந்தே

யைந்தெழுத்துத் தழைய வெண்ணி

யண்ணியமா சைவர்பல ரிருபாலு

நிரைநிரையா வமர்ந்து பூசை

பண்ணியவன் னோர்புரிந்த புண்ணியம்போற்

பெருக்கெடுத்திப் பார்கொண் டாட

நண்ணியபல் வளம்பெருக்கி யுயிர்புரக்கும்

பொருநைமா நதித் தீரத்தில்.       ( 7 )

 

பூமணக்குந் திருமாதும் பொலிதருநான்

மறைமணக்கும் புவன மீன்றோ

னாமணக்குங் கலைமாதுங் கலந்தென்று

மொருவாத நளின மாகிக்

காமணக்கும் புவிமாது திருமுகம்போ

லெஞ்ஞான்றுங் கவின்பெற் றோங்கிப்

பாமணக்குஞ் சீர்புனைந்த செவந்திபுர

மெனும்பெயர்கொள் பதியின் மாதோ.             ( 8 )

 

நூலோது முனிவரர்கள் பணிந்துபுகழ்ந்

தேத்தவரு ணோண்மை வாய்ந்த

வாலோதென் பெருந்துறைவாழ் குருந்தோகோ

முத்திவள ரரசோ வின்பப்

பாலோது நான்மறையி னந்தமோ

விளங்குறுமிப் படிவ மாகச்

சேலோது விழியர்மய லகன்றொளிர்தன்

றிருவுளமோ திரிந்த தென்று        ( 9 )

 

ஆய்ந்தபெருங் கல்வியறி வொழுக்கமே

யிவ்வுருவா யமைந்த தென்ன

வேய்ந்தவெழின் மிளிர்குமர சாமிமுனி

வரன்றுறவி னியலோ வாது

வாய்ந்தவா றுமுகமுனி வரன்பழனிக்

குமாரமுனி வரன்பாகத்தைத்

தோய்ந்தரவி யிராமலிங்க முனிபரம

சிவமுனிமுற் றூயோ ரன்றி.        (10 )

 

துன்னுறுபே ரிலக்கணமு மிலக்கியமு

மீனாட்சி சுந்த ரப்பேர்

மன்னுறுநா வலர்பெருமா னிடையுணர்ந்தெல்

லாநலமும் வாய்ந்தன் னோன்போற்

பன்னுகவி சொல்சாமி நாதமறை

யோனியற்சண் புகக்குற் றால

மென்னுமுயர் பெயர்புனைந்த கவிராஜன்

முதற்பலரு மியம்பி யேத்த.        ( 11 )

 

பொன்னாலு மணியாலும் புதியதிரு

மடமொன்று புரிந்து தன்கட்

டென்னாலுந் துறைசைச்சுப் பிரமணிய

குரவர் பிரான் றிருநோக் கென்றுஞ்

சொன்னாலு முனிவரர்போற் றூய்மையுடை

யார் பலருந் தோயுமாறு

மின்னாலு மனையனெழிற் றிருவுருவ

மினிதமைத்து விளக்கஞ் செய்து.           ( 12 )

 

நல்லார்க ளுளமகலா வனையகுரு

சாமியயழி னலத்த தாய

சொல்லாருங் கொலுத்திருவோ லக்கத்தி

லினிதமர்ந்து துலங்கு காட்சி

பல்லாருங் கண்டுயர மானந்த

வாரியிடைப் படியப் பண்ணி

வில்லார்தா முறுமின்பம் பலருறச்செய்

பெரியரியல் விளக்கினானே.        ( 13 )

 

சுப்பிரமணியவிலாச சிலாசாசனச் செய்யுள்

திருவாவடுதுறை ஆதீன வித்துவான்

குமாரசாமித் தம்பிரான் சுவாமிகளியற்றியது

 

மன்னுசீர்ச் சாலி வாகன சகாத்த

மாயிரத் தெழுசதத் தோடு

மருவிய தொண்ணூற் றொன்பதீச் சுரநல்

வருடத்தி லாடிமா மதியிற்

றுன்னுமுத் தேதியாதி யாவறுபான் றினத்துட்

சொலற் கருமைத் தாய்த்

துவன்றுபல் லங்க மமைதிரு மடத்தைத்

தொகுபுகழ்ச் செவந்தியி னமைத்துப்

 

பன்னுநற் றுறைசைப் பஞ்சாக்கரற் கீரெட்

டானபிற் றோன்றலென் றிப்பார்

பரவுசுப் பிரமணியகுரு மணியின் றிருவுருப்

பதிட்டைசெய் தருச்சித்

துன்னுமற் றவன்றன் றிருவருட் பதிட்டை யுளத்திடைச்

செய்தன னுறைந்தா

னுயர்புகழ்க் காறு பாறுவே ணுவன

லிங்கமா தவர்க்கொரு மணியே.

 

அன்றியும் அத்திருமடத்தில் ஞானதேசிகர் திருவுருப் பிரதிட்டை முன்னரே செய்து பூசித்துவரும் வேணுவனலிங்க சுவாமிகள் விரும்பிய வண்ணம் அச்சுவாமிகள் நித்திய நியமமாக பூசாகாலத்தில் தோத்திரஞ் செய்யும் பொருட்டு ஞான தேசிகர் மீது பத்து திருவிருத்தங்கள் பாடி அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் மாலையயன்று பெயர்சூட்டி ஆதீன வித்துவான் குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் அச்சுவாமிகளுக்கு அப்பாமாலையை அளித்தனர்.

அவை வருமாறு :

பூமலி நினது திருவருள் குறித்துப் போற்றவும்

போற்றுமெய் யடியார்க்

காமலி பணிசெய் தவரருள் பெறவு மடியனேற்

கின்னருள் புரிவாய்

தேமலி கழுநீ ரலங்கறை வருதோட் செம்மலே

சிறியனேன் றனையுந்

தூமலி தரச்செய் தாண்டமெய்த் துறைசைச் சுப்பிர

மணி யதேசிகனே.           ( 1 )

 

சாற்றுபல் புவனப் பரப்பெலாந் தாயர் சலிப்புற

வவர் வயிற் சார்த

லேற்றுவெங் கொடிய துயரமே யுழக்கு மேழையேற்

கத்துயர் முழுது

மாற்றுபு கருணை வழங்குநின் னடியில் வணங்குத

லன்றிமற் றறியேன்

றூற்றுபூம் பொழிற்கா விரிசுலாந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 2 )

 

மறைமுத லாய கலையயலாம் வணங்கும் மாண்பினர்

தம்மனத் தோங்கி

நிறைதரும் விரிப்பிற் கிரட்டிமே லருளு நிமலனீ

யயன்றிட றெரிய

குறைபல வுடையே னினைத்தவா காட்சி கொடுத்துநின்

றிருவருள் கொடுத்தாய்

துறைதொறுங் கமல நிறைதருந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 3 )

 

ஆதியி லுயிர்கட் குடன்முத னான்கு மளித்தனங்

கருணையி னவைசேர்

நீதியிற் கரும மியற்றுமக் கரும நிகழ்வழி

நிகழ்த்துவம் யாமென்

றோதிய நீமுன் னெக்கரு மத்தாலுடன்முத

லளித்தனை யுரைப்பாய்

சோதியே யறவர் சூழ்பெருந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 4 )

 

மதிநுதன் மடவார் போகமே முதலா வகுத்தபன்

முத்தியு மயக்காற்

பொதிமதி யுடையோர்க் காகுநம்மடியிற் பொருந்துபன்

முனிவருக் களிக்கும்

பதிதரு முத்தி யவையல வெனற்கோ பரவுகோ

முத்தியி லுறைந்தாய்

துதிகெழு வளத்தந் நகரமாந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 5 )

 

மதிக்குநின் றிருவா யுதிக்குநால் வேத வழிபயி

லடியவர் சிரத்திற்

பதிக்குநின் கமல பாதமென் சிரத்தும் பதித்துயர்

பங்கயா சனத்து

விதிக்குமா பதிக்கு முறுசெய லென்பால் விலக்கியாண்

டருளினை யயந்தாய்

துதிக்குமெய்ப் புலவர்க் கதிக்கும்வான் றுறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 6 )

 

அன்றுகல் லாலி னான்முனி வரர்க்கா வருளுரு

வெடுத்திவ ணமர்ந்து

மின்றுபன் முனிவர்க் கருளுவா னிந்த வெழிலுருத்

தாங்கியு மெழுதற்

கொன்றுநின் னருள்கா ரணமலால் வேறா வுரைப்பவு

முள்ளதோ வருளாய்

துன்றுபன் முத்தர் சித்தர்வாழ் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 7 )

 

உன்னுமோர் கரும முன்னியாங் குஞற்ற லுயிர்களுக்

கிலைநமக் குளதா

மென்னுநீ யயாப்பு முயர்வுமின் மையினா லெழுந்தபே

ரருளினா லியார்க்கும்

பன்னுநின் வரவின் கரவினைத் தெரித்தெம் பரிசையே

பரித்திட லெவன்கொ

றுன்னுசெந் தமிழா கரமெனுந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 8 )

 

நிலவுமிவ் வுலகிற் பல்வகைப் பிறப்பு ணிகரிலா

மானிடப் பிறப்போ

டுலவுமெய்ச் சைவத் துற்றிடல் பேறென் றுறைப்பர்நின்

றிருவடித் தொழும்பிற்

குலவுமிப் பேறே பேறென வடியேன் கொண்டுளங்

களித்தல் சத்தியமே

கலவுநற் றிருமந் திரமெழுந் துறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 9 )

ஆயநால் வேதச் சிரத்தினு மன்பரகத்தினு

மருளின்வீற் றிருத்தன்

மேயநீ யடியேன் விழைந்தவர் மேவி விளங்குமிச்

செவந்திமா நகரிற்

பாயநின் றிருத்தா ணாடொறும் பல்காற் பணியவீற்

றிருத்தல்பே ரருளே

தூயவம் மலர்த்தாள் வாழ்கநற் றுறைசைச் சுப்பிர

மணியதே சிகனே.          ( 10 )

 

மாலை முற்றிற்று.

 

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிக சுவாமிகளுடன் நாடோறும் பாவநாசமென்னும் பதியிற் சென்று பொருநைநதி நீராடித் திருக்கோயிலிற் சென்று முக்களாலிங்கரையும், உலகம்மையையுந், தரிசித்து வணங்கிக் கொண்டு, செவந்திபுரத்திற் சிலநாள் வசித்திருந்து, அங்கு நின்றும் புறப்பட்டுத் திருக்குற்றாலம் என்னுந் திவ்வியநகரைச் சார்ந்து சித்திராநதி நீராடித் திருக்கோயிலிற் சென்று அங்கு சிவபிரானைத் தரிசனஞ்செய்து, தமது திருமடத்திற்கு எழுந்தருளி துவிதீய ஆசிரியராகிய முத்தம்பலவாணதேசிக சுவாமிகள் குருமூர்த்தந் தரிசித்து அங்கு சிலநாள் வசித்திருந்து, அப்பதியினின்றும் அரிதினீங்கிச் சங்கரநாராயணர் கோயிலென்னுந் தலத்தை அடைந்து திருக்கோயிலிற் சென்று சிவபிரானைத் தரிசித்து, தமது திருமடத்திற்கு எழுந்தருளி பஞ்சாக்கர தேசிகோத்தமருக்குப் பத்தாவது பிற்றோன்றலாகிய வேலப்பதேசிகர் குருமூர்த்தம் தரிசனம் செய்துகொண்டு அங்கு சிலபகல் வசித்திருந்து, அங்கு நின்றும் புறப்பட்டு கரிவலம் வந்த நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டு அவ்விடத்து நின்றும் அரிதினீங்கி திருநெல்வேலி என்னும் திவ்விய சிவநகரை அடைந்து தம்பாற் சரண்புகும் அன்பர்களுக்குத் தீக்கையாதிகள் செய்துகொண்டு சிலநாள் அங்கு வசித்திருந்து, திருச்செந்தூர் என்று பெயர் வழங்குஞ் சீரலைவாய் என்னும் திவ்ய தலத்தை அடைந்து சமுத்திர தீர்த்த நீராடித் திருக்கோயிலிற் சென்று சண்முகப் பெருமான் சரணிணைப் பணிந்து, சாற்றரும் உழுவலன்புடன் தரிசனஞ்செய்து அங்கு சிலபகல் வசித்திருந்து, அங்கு நின்றும் அரிதினீங்கி வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக்கொண்டு ஆளுடையார் கோயிலெனப் பெயர் வழங்கும் திருப்பெருந்துறையை அடைந்து, துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகளோடு திருக்கோயிலிற்சென்று ஆன்மநாதரையும், யோகாம்பிகையையும், குருந்தமூலநாதரையும், மணிவாசகப் பெருமானையும் தரிசித்துத் தமது திருமடத்திற்கெழுந்தருளி பின் வேலப்ப தேசிகர் குருமூர்த்தம் தரிசித்துக் கொண்டு அங்கு சிலகாலம் வசித்திருந்தனர்.

அக்காலத்தில், கோயில் கட்டளைப் பணி புரிந்துவரும் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் ஞானதேசிகர் திருவருளாணை மேற்கொண்டு புதிதாகச் சினகரம் அமைத்து மணிவாசகப் பெருமான் திருவுருப் பிரதிட்டை செய்து, கும்பாபிடேகஞ் செய்வித்தனர். ஞானதேசிகர் துவிதீய ஆசிரியரும், தம்பிரான் சுவாமிகளும், ஏனைய அடியார்களும், பரிசனங்களும் உடன்வரத் திருக்கோயிலிற்சென்று சுவாமி தரிசனஞ் செய்து கொண்டு அங்கு நின்றும் அரிதினீங்கி, வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்து வருகையில், திருப்பனந்தாள் என்னும் சிவநகரிலே அமர்ந்திருக்கும் காசிவாசி இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள், ஞானதேசிகர் எழுந்தருளுதலைக் கேள்வியுற்று வந்து எதிர்கொண்டு, தமது வாசஸ்தானமாகிய அத்திரு நகருக்கு எழுந்தருளுமாறு வேண்ட, ஞானதேசிகர் அங்கெழுந்தருளி திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ் செய்து, காசி மடத்திற்கு எழுந்தருளி குருபூசை மாகேசுரபூசை முதலானவைகள் அச்சுவாமிகள் சிறப்புற இயற்றத் தாம் துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகள் உடன்வரப் பவனிகொண்டருளிக் குருதரிசனக் காட்சி அளித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், அங்கு நின்றும் புறப்பட்டு திருவாவடுதுறைக்கு எழுந்தருளித் திருக்கோயிலிற் சென்று சுவாமி தரிசனஞ்செய்து, தமது திருமடத்தினை அணைந்து மடத்து வடக்கு வாசலின் மேல்பால் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சிவப்பிரகாச விநாயகரைத் தரிசித்து, உள்ளே சென்று, திருமாளிகைத் தேவரைத் தரிசனஞ்செய்து, ஆதீன பிரதமாசாரியராகிய நமச்சிவாய தேசிகோத்தமர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து ஒடுக்கத்திற்கு எழுந்தருளி யாவருக்குங் குரு தரிசனக் காட்சி அளித்தருளினர். பின்னர் ஞானதேசிகர், அங்கு தாம் வந்த சுபதினத்திற்குப் பதினொன்றாவது தினம் பஞ்சாக்கர தேசிகர் மகரத் தலைநாட் குருபூசை மஹோத்சவம் வந்தணுகுவதை ஆராய்ந்து மூல நட்சத்திரங்கூடிய சுபதினத்திலே வழக்கப்படி அன்னக்கொடி ஏற்றி நமசிவாய மூர்த்திகளுக்கு அந்நாள் முதல் பத்து நாள்வரை ஒவ்வொரு நாளும் காலை மாலை இருபொழுதும் அபிடேகாதி ஆராதனையும் மாகேசுர பூசையும் சிறப்புற இயற்றி, மறுநாள் முற்பகலில் நமசிவாய மூர்த்திகளுக்கு நித்தியபூசை வழக்கப்படி செய்து, துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகளும், தம்பிரான் சுவாமிகளும் ஏனைய அடியவர்களும், அன்பர்களும், உடனிருந்து அமுதுகொள, தாம் திருவமுது செய்தருளினர். பின்பு ஞானதேசிகர் அன்றைய தினம் பிற்பகற் பொழுதெல்லாம் ஆதீன பரம முதற்குரவராகிய பஞ்சாக்கர மூர்த்தியின் அருளுபதேச அருந்திறண்மாண்பினை விரித்துரைத்து.

(ஆதீன வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இயற்றிய ஞானதேசிகர், நெஞ்சுவிடுதூது என்னும் நூலிலுள்ளது.)

 

மாமுனிவர் தூய்மை மருவுநறு நீராட்டி

யேமுறுமெய் யயாற்றாடை யிட்டதற்பின் ‡ காமன்வலி          ( 71 )

 

வென்றதிறங் காட்டி விளங்குகற் றோயாடை

யயான்ற வரையி லுடுத்தருளி ‡ நன்றமையு                    ( 72 )

 

மாதனத்து மேவி யருகமரும் வட்டகையின்

மாதனத்தி னாளும் வயங்குவதாய் ‡ மோதும்             ( 73 )

 

பசுமலநீ றாக்கியுயர் பண்பே யருளப்

பசுமலநீ றாக்கியமை பண்பாய் ‡ வசுவி           ( 74 )

 

னடுத்தவையயல் லாம்புனித மாக்குதிரு வெண்ணீ

றெடுத்தவை யவங்குலவ வேற்றி ‡ விடுத்தசுட           ( 75 )

 

ரொன்பான் மணியு மொளிர்தருசிந் தாமணியும்

வன்பார் கவுத்துவ மாமணியு ‡ மன்பி             ( 76 )

 

லொருதிரண மாக்கு முருத்திராக் கங்கள்

பொருவில் சிரமுதலாப் பூண்டு ‡ கருது           ( 77 )

 

மிருவ ரழுக்கருப்ப வேற்றசடா மோலி

யிருவரிரு கைகொடுப்ப தேற்றே ‡ திருவமரும்           ( 78 )

 

மார்ப னயன்காணா மாபரன்றன் கோயிலுக்கு

நார்பணவர் தற்சூழ னண்ணியே ‡ ஆர்வமிகுஞ்           ( 79 )

 

சிந்தையோ டெம்மான் தெரிசனஞ் செய்துவந்து

பந்த மகற்றுபஞ் சாக்கரவர் ‡ கந்தமிகும்          ( 80 )

 

செந்தா மரை போலுஞ் சேவடிகள் பூசனைசெய்

தந்தா ரணியோர்க் கருடரவே ‡ சிந்தனைசெய்     ( 81 )

 

தெங்கண் மணிமோலி யயன்னவொளிர் பாதுகைமற்

றங்கணெதிர் வைப்ப வவற்றிவர்ந்து ‡ துங்க              ( 82 )

 

முரசு முழவ முருடு திமிலை

பரசு தடாரி படகம் ‡ விரசு          ( 83 )

 

பலவு மெழுந்து பரம்பி முழங்க

நிலவு பிறவு நிகழக் ‡ குலவு              ( 84 )

 

திருவா வடுதுறைவாழ் செல்வன்வந்தா னெம்மு

ளொருவா வொருவன்வந்தா னுற்றார் ‡ மருவு           ( 85 )

 

பிறப்புமுழு தொழிக்கும் பேராளன் வந்தான்

சிறப்பருள் செம்மல்வந்தான் றிண்பா ‡ ருறப்புகுந்த       ( 86 )

 

துங்க மலிஞான சூரியன்வந் தானுயிரின்

பங்க மறுக்கும் பரன்வந்தா ‡ னெங்கள்            ( 87 )

 

குருசாமி வந்தான் குணக்குன்று வந்தா

னருண்ஞான மூர்த்திவந்தா னன்பர் ‡ பெருவாழ்வாந்             ( 88 )

 

தம்பிரான் வந்தான் றழைசுப் பிரமணிய

நம்பிரான் வந்தா னலமாரு ‡ மெம்பிரான்         ( 89 )

 

வந்தான்வந் தானென்று மாண்பார் திருச்சின்ன

நந்தா வொலியயழுப்பி நன்குவர ‡ முந்தா         ( 90 )

தரம்பெருக வாலவட்டந் தாலவட்டம் பெருகி

வரம்பெருக வோர்பான் மலிய ‡ நிரம்பு            ( 91 )

 

முழுமதிய மேலமர்வான் முந்திமுயன்றென்ன

வெழுகவிகை செய்யுநிழ லேய்ப்பத் ‡ தழுவு       ( 92 )

 

பெரும்புகழ்வெவ் வேறாய்ப் பெயர்ந்து பெயர்ந்து

விரும்பலுறத் துள்ளும் விதம்போ ‡ லரும்பு       ( 93 )

 

பவளக்காற் சாமறைகள் பற்பலவு மொய்த்துத்

திவளத் தலைப்பனிப்புச் செய்ய ‡ விவளவெனாக்         ( 94 )

 

கோணாக தண்டமொடு கோணலுறு தண்டமு

நாணாளு நீங்கா நலங்காட்டப் ‡ பேணா    ( 95 )

 

வலர்மகர தோரணங்க ளாயு மொலியல்

பலவு நெருங்கிப் பரம்பக் ‡ குலவுதிற             ( 96 )

 

வோதுவார் பல்லோ ரொருங்குதே வாரங்க

ளோதுவா ராய்த்தாள மொத்தலொடு போதவெளி          ( 97 )

 

வந்து மணிச்சிவிகை வாயோர் களங்கமிலா

விந்துநிறைந் தென்ன வெழுந்தருளி ‡ முந்து      ( 98 )

 

மனை துறந்தார் செஞ்சடிலம் வைத்தாரஃ தின்றி

நினையு மழித்தலுற்ற நீரார் ‡ புனையுமறைக்            ( 99 )

 

கீளோடு கோவணத்தார் கேடில்கர பாத்திரத்தா

ராளொடுவாழ் வாமில் லறத்தமர்ந்தார் ‡ நாளுஞ்          ( 100 )

 

சரியை கிரியை தவயோக ஞானம்

விரியவனுட் டிக்கும் விருப்பார் ‡ தெரிய          ( 101 )

 

உலகம் பழியா துறுவேடம் பூண்டா

ருலகம் பழிக்க வுவப்பா ரிலகு             ( 102 )

 

திரிபுண் டரத்தார் திகழ்கண் மணியார்

விரிதரவுத் தூளனமே மேயார் ‡ பரியு             ( 103 )

 

மரனடியார் தொண்டி னமைந்தா ரளவாச்

சுரர்புகழ்கோ யிற்பணியே சூழ்வார் ‡ விரிவு       ( 104 )

 

மடியாருக் கன்னமுத லாதரித்து நல்கு

நெடியார் தியான நிறைந்தார் ‡ கடியார்            ( 105 )

 

மலர்தொடுப்பார் தீபம் வயக்குவார் மற்றும்

பலர்புகழுஞ் சாத்திரங்கள் பார்ப்பார் ‡ நிலவுபொரு        ( 106 )

 

ளாய்வார் வினவுவா ரங்கைகொட்டி நட்டமிட்டுத்

தோய்வாரா னந்தத் தொடுகடலில் ‡ வாய்வார்            ( 107 )

 

துதியா ரயன்முதலாச் சொல்லும் பிறரை

மதியா ரருளே மதிப்பார் ‡ கதியா          ( 108 )

 

ரிவர்மு னனைவோரு மேத்திக்கை கூப்பிக்

கவரடையா நெஞ்சங் கரைந்து ‡ சிவசிவவென்            ( 109 )

 

றார்ப்பாரோர் சில்லோ ரரகரவென் றானந்தம்

போர்ப்பாரோர் சில்லோர் புடைநெருங்க ‡ வேர்ச்சிவிகை          ( 110 )

 

செம்மையுறு காட்சிச் சிவிகை கொடுத்தடைந்தார்

தம்மை யியக்குவார் தாங்கிவர ‡ வெம்மைக்             ( 111 )

 

கதிர்பன் னிருகோடி காணவெளிப் பட்ட

முதிர்விற் பெருந்தீப மெய்யப்ப ‡ வதிர்சிலம்பிற்          (112 )

 

பொன்னங்கொம் பன்னார் புகுந்துநீ ராசனஞ்செய்

தன்னம் பெயர்ந்தாங் கயலொதுங்க ‡ முன்னம்           ( 113 )

 

விரைமலர்கள் சிந்தி விரைச்சாந்தம் வாரிப்

புரையறப்பெய் வாரும் பொலிய ‡ வுரைசிறந்த           ( 114 )

 

மெய்கண்டான் சந்ததிக்கு மேன்மேல் விளக்கமுறப்

பெய்கண்டா னாய பெருமானே ‡ வையம்         ( 115 )

 

புகழ வருங்குரவர் போரேறே ஞானந்

திகழ வவதரித்த தேவே ‡ யிகழ்வில்                    ( 116 )

 

வரமணியே யயங்கள்பெரு வாழ்வே யருட்சுப்

பிரமணிய தேசிகனே பெட்பி ‡ னுரமணிய         ( 117 )

 

முன்னமே செய்தோ முயங்கு தவத்தையினி

யயன்ன குறையுடையோ மென்பாருஞ் ‡ சொன்னகதிர்           ( 118 )

 

முன்னமிரு ணின்றாலு முற்று முணர்ந்தோய்நின்

முன்னமிரு ணில்லாது முற்றுமென்பார் ‡ நன்னயமார்           ( 119 )

 

சித்தாந்த சைவமன்றிச் சேரமற் றுள்ளவெல்லாம்

பித்தாந்த மேலும் பிறப்பென்பா ‡ ரித்தரணி        ( 120 )

 

பெற்றபே றுண்டோ பெருவானி னீபயில

லுற்றநா ளாதி யுரையயன்பார் ‡ கற்ற            ( 121 )

 

குருமணிநீ யாரையுமாட் கொண்டு புரக்க

வருமணியோ வென்று வகுப்பார் ‡ பெருகொளிசால்             ( 122 )

 

விண்மணியே ஞான விளக்கே யடியேங்கள்

கண்மணியே யயன்று கரைதருவா ‡ ரெண்ணுமுழு ( 123 )

 

மாயப் பெருஞ்சாரு வாகன்முத லோருமரு

ளேயப் பொலிவா ரினியயன்பார் ‡ தோயும்        ( 124 )

 

பகுதி யளவே பகரைந் திரவோர்

தகுதிவெண்ணீ றென்றணியச் சார்ந்தார் ‡ மிகுதி          ( 125 )

 

யுனியா மெடுத்திங் குரைப்பதெவ னெல்லா

மினிமாறில் சைவமே யயன்பார் ‡ நனிபுரியும்            ( 126 )

 

வேலையயாழிந் தான்பிரமன் வெய்ய நரகிலிடும்

வேலையயாழிந் தானியமன் மேன்மேலுஞ் ‡ சாலவருள்         ( 127 )

 

வீசி யனைத் துயிர்க்கு மெய்ச்சுப் பிரமணிய

தேசிகன் செய்யுந் திறத்தென்பார் ‡ மாசி           ( 128 )

 

றிருவா வடுதுறையே திக்கனைத்தும் போற்றப்

பொருவாத தென்று புகல்வா ‡ ரருள்சான்மா              ( 129 )

 

சில்லா மணியேமற் றிச்சுப் பிரமணியீ

தல்லா துரைப்பதுள தாங்கொலென்பார் ‡ வல்லபிரா             ( 130 )

 

னெற்றிக்க ணீத்தமரு நேய மெவனென்பார்

பற்றிக் கரும்புகொடு பையவந்து ‡ முற்றி         ( 131 )

 

யயாருவே ளுடற்றாமை யோர்ந்தென்பா ரம்மை

யிருவாள் விழியுமிரு கையாற் ‡ முற்றி          ( 132 )

 

புதையாமை தேர்ந்தென்பார் பொங்குதலை மாலை

யதையே னொழித்ததென்பா ராவா ‡ கதைமாலும்         ( 133 )

 

பங்கயனு முன்போற் பரனாம் பரனாமென்

சங்கையடை யாமையாற் றானென்பார் ‡ பொங்கு         ( 134 )

 

மதியயாழித்த தென்னென்பார் மாசிலா ருக்கே

கதியருளற் கென்று கரைவார் ‡ பொதியு          ( 135 )

 

மிதழி மணந் தோளிலுறா தென்னென்பார் செவ்வா

யதுகமழ்த லாலென் றறைவார் ‡ முதுமானொன்         ( 136 )

 

றோட்டி விட்டதென்னென்பா ரோட்டிவிடா னேலுயிர்கள்

வீட்டி லுறலெவ் விதமென்பா ‡ ரீட்டமுறு ( 137 )

 

மாசடையா னென்னும் வழக்கிலையயன் பாரென்று

மாசடையா னென்னல் வழக்கென்பார் ‡ பேசுமொரு       ( 138 )

தோகையிடப் பாலனெனச் சொல்லாமென் பாரரைசூழ்

தோகையிடப் பாலனெனச் சொல்லுமென்பார் ‡ வாகை           ( 139 )

 

பரசுகைக்கொள் ளாத படியயவனென் பார்நம்

பரசுகைக்கொள் ளும்பரனே யயன்பார் ‡ விரசு            ( 140 )

 

மருள்விடங்கண் டங்கழித்த வாறென்னோ வென்பா

ரருளமுதங் காணென் றறைவார் ‡ தெருளு        ( 141 )

 

மடிநிலந் தோய்குவதென் னாமென்பார் தோயா

விடினியமன் றண்டநம் மெய்யின் ‡ முடியப்             ( 142 )

 

படுமே யஃதுணர்ந்து பாரீரோ வென்பா

ரிடுமாறு சென்னிவைம்மி னென்பார் ‡ வடுவரிய          ( 143 )

 

னென்பதெவ னென்பார்மெய் யேகம ருள்ளிருந்

தன்பி னமுது செய்த தாலென்பா ‡ ரின்பமிகு             ( 144 )

 

மிந்தவிதம் யாரு மியம்பித் துதித்துவரப்

பந்த மகற்றும் பவனி ‡ வந்து.             ( 145 )

தமது மடாலயத்தினுள்ளெய்தி சிவப்பிரகாச விநாயகரையும், திருமாளிகைத் தேவரையும், திருநமச்சிவாய தேசிகோத்தமரையும் தரிசனஞ் செய்து ஒடுக்கத்திற்கு எழுந்தருளி ஆசனத்தமர்ந்து துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகள் தமக்கு அபிடேகம், அருச்சனை, அலங்காராதிகள் செய்து தீபாராதனைபுரிய தாம் யாவர்க்குங் குருதரிசனக்காட்சி அளித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர், துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிக சுவாமிகளோடு அங்கு எழுந்தருளியிருந்து ஞானோபதேசஞ் செய்து வருவாராயினர். அங்ஙனம் ஞானோபதேசம் செய்து வரும் நாட்களில் சிதம்பரத்தின்கண் ஆறுமுகநாவலர் தம் கல்விக்கழகத்தில் தலைமை உபாத்தியாயராக அமர்ந்திருந்த யாழ்ப்பாணத்து வடகோவைச் சபாபதிபிள்ளை என்பவர் திருவாவடுதுறையை அடைந்து ஞானதேசிகர்பால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றுச் சென்றனர். பின்பு அவர் சிலகாலஞ்சென்று ஞானதேசிகரை அடைந்து தரிசித்து மெய்கண்ட சாத்திரம், பண்டார சாத்திரங்களின் நுண்பொருள் ஞானதேசிகரிடத்துக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து சிலபகல் அங்கமர்ந்திருந்தனர். அக்காலத்தில் ஞானதேசிகர் அவர் தம் பிரசங்க சாதுரியத்தை நாடோறும் நன்குணர்ந்து பெரிதும் திருவுளமகிழ்ந்து அவர் தமக்கு நாவலர் என்னும் பட்டாபிதானத்தை அளித்தருளினர்.

பின்பு ஞானதேசிகர் சில பகல்சென்று துவிதீய ஆசிரியராகிய நமசிவாயதேசிக சுவாமிகளை செழியநாட்டின்கண்ணும், சேரநாட்டின் கண்ணுமுள்ள சீடர்களுக்கு ஞானோபதேசம் செய்து வருமாறு பணித்தருள, ஞானதேசிகர்பால் அத்தேசிக சுவாமிகள், பிரியா விடைபெற்று வழியிடையிற் பல தலங்களைத் தரிசித்துக் கொண்டும், ஆங்காங்கு தம்பால் சரண்புகும் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டும், கல்லிடைக் குறிச்சியின் வடபாங்கருள்ள திருத்தளிச்சேரிக்குச் சென்று திருக்கோயிலை அடைந்து மானேந்தி அப்பரையும் வடிவாம்பிகையையுந், தரிசித்துத் தமது திருமடத்திற்கு எழுந்தருளி துவிதீய ஆசிரியராகிய கனகசபாபதிதேசிகர் குருமூர்த்தந் தரிசனஞ்செய்து, அத்தலத்தில் சிலகாலம் சீடர்களுக்குத் தீக்கையாதிகள் செய்து கொண்டிருந்தனர். அங்ஙனம் சீடர்களுக்கு ஞானோபதேசஞ் செய்து கொண்டிருந்த தேசிக சுவாமிகள், அத்திருப்பதியிலே சித்திரபானு வருடம் தைமாதத்துக் கார்த்திகை நட்சத்திரத்திலே, சிவபரிபூரணம் உற்றருளினர். அங்ஙனம் துவிதீய ஆசிரியராகிய நமசிவாய தேசிக சுவாமிகள் சிவபரிபூரண முற்றருளிய திருவருட் செய்தியை அடியார் சிலர் வந்து ஞானதேசிகர் பால் விண்ணப்பஞ்செய்ய, அதற்கு ஞானதேசிகர், கன்று பிரிந்த புனிற்றாவினைப் போல திருவுளமிரங்கிப், பின்பு தமது பரமாசாரியரது பாதத்துணைமலரைச் சிந்தித்துக்கொண்டிருந்தருளினர்.

அக்காலத்தில் கேரள தேசத்தின்கண் அரசு வீற்றிருந்த ஆயிலிய மகாராசாவுக்குப் பின் முடிசூடிய விசாக மகாராசா என்பவர், காசியாத்திரை செய்து வருகையில் ஞானதேசிகரைத் தரிசிக்க விரும்பித் திருவாவடுதுறையை அடைந்து, மடாலயத்தின்கண் எய்தி ஆதீனப் பிரதமாச்சரியராகிய நமச்சிவாய மூர்த்திகளையும், ஞானதேசிகரையும் தரிசித்துப் பெருமகிழ்வெய்தி இரண்டுதினம் அங்கமர்ந்திருந்து பின்பு ஞானதேசிகர் பால் பிரியா விடைபெற்றுத் தமது நகரடைந்தனர்.

பின்பு ஞானதேசிகர் தமது ஞானோபதேச மரபு அங்குரித்தற்கோர் களைகண்ணாகிய துவிதீய ஆசிரியர் நியமனஞ்செய்யத் திருவுளங்கொண்டு, தமது திருக்கூட்டத்துத் தம்பிரான்களோடு உசாவி, அவர்களும் தாமும் நன்காராய்ந்து மதிக்கப் பெற்ற ஒருவரும், தம்பால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றவரும், துலாவூர் வடுகநாத பண்டாரமென்பவர் புத்திரரும், அருணாசலமென்னும் பிள்ளைத் திருநாமும், அம்பலவாணனென்னும் தீக்ஷாநாமமும் உடையவருமாகிய ஒரு தம்பிரான் சுவாமிகளுக்குச் சர்வசித்து வருடம் தைமாதம் பதின்மூன்றாந்திகதியில் ஆசாரியா பிடேகஞ்செய்ய நிச்சயித்து பத்திரிகை பிரசுரித்தும், ஞானதேசிகர் தமது திருமேனிப்பாங்கினை நன்காராய்ந்து குறித்த சுபதினத்திற்கு முன்னரே அவ் அம்பலவாணத் தம்பிரான் சுவாமிகளுக்கு விதிப்படி ஆசாரியாபிடேகஞ் செய்து தாம் சர்வசித்து வருடம் மார்கழி மாதம் இருபத்தைந்தாந் திகதியில் நிகழும் ஸ்திரவாரமும் சுவாதி நக்ஷத்திரமும் அமரபக்ஷம் நவமியுங் கூடியதாகிய சுபதினத்திலே சிவபரிபூரண முற்றருளினர். இந்த ஞானதேசிகர் சிவஞான சித்திக்கு ஓர் பதவுரையுஞ் செய்தருளினர். இது பின்னது நிறுத்தலென்னும் ஒத்தி,

இந்த ஞானதேசிகர், சீகண்டபரமசிவன் அருளுபதேசம் பெற்ற திருநந்திதேவர் மரபில் இருபத்தாறாவது பிற்றோன்றல் என்பதூஉம் ; இந்த ஞானதேசிகர்க்கு பத்தொன்பதாவது முற்றோன்றலாகியும், திருநந்தி தேவர்க்கு எட்டாவது பிற்றோன்றலாகியும் உள்ளார் உமாபதி சிவாசாரிய சுவாமிகள் என்பதூஉம், இத்தேசிகோத்தமருக்குத் துவிதீய ஆசிரியர் நமசிவாய தேசிக சுவாமிகள் என்பதூஉம், இவ்வாசிரிய சுவாமிகளுக்கு முற்றோன்றலாகியும், பிற்றோன்றலாகியும் உள்ளார் அம்பலவாண தேசிகர்கள் என்பதூஉம், திருநந்திமரபில் இருபத்தைந்தாவது பிற்றோன்றலாகிய அம்பலவாணதேசிக சுவாமிகளாகிய தமது ஞானாசிரியர்பால் மூவகைத் தீக்கையுஞ் சித்தாந்த சாத்திரோபதேசமும் பெற்றவராகிய திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவருக்கு இத்தேசிகோத்தமர் தமது ஆதீன மகாவித்துவான் என்னும் பட்டாபிதானங் கொடுத்தருளினர் என்பதூஉம், அவருக்குப் படிகலிங்கபூசை எழுந்தருளப் பண்ணிக் கொடுத்தருளினர் என்பதூஉம், பிறவும் பின்வருஞ் செய்யுட்களால் இனிது விளங்கும்.

அவை வருமாறு :

ஞானதேசிகர்மீது

திருவாவடுதுறை ஆதீனம் மகாவித்துவான்

மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் இயற்றிய

 

நெஞ்சுவிடு தூது

 

வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்

பிரமணிய தேசிகன்பாற் பெட்புற் ‡ றுரமணியி

னாய்ந்துதஞ்ச மாயயாருகோட் டண்ண லருட்கிலக்கு

வாய்ந்துநெஞ்சே தூது சென்று வா.

 

உன்னைப்போல் வேறுதுணை யுண்டோ குரவர்பிரான்

றன்னைப்போல் வேறொருவர் தாமுளரோ ‡ வன்னை     ( 252 )

 

யனைய குரவர் பிரா னான்ற மரபு

நினைய வகுத்துரைப்ப னீகேள் ‡ புனையவரு             ( 253 )

 

காமர் கயிலையிற்சீ கண்ட வுருத்திரன்பா

லேமவருள் பெற்றநந்தி யயம்பெருமான் ‡ றோமில்       ( 254 )

 

வழியே வருசனற்கு மார முனிவர்

பழியேது மில்லாத பண்பிற் ‡ கொழியருள்சால்           ( 255 )

 

சத்திய ஞான தரிசனிகள் யாவோருந்

துத்தியம் செய்யபரஞ் சோதியார் ‡ நித்தியமார்            ( 256 )

 

மெய்கண்ட தேவர் விளங்குமருணந்தியார்

பொய்கண்ட யாரும் புணரருஞ்சீர் ‡ மொய்கடந்                  ( 257 )

 

தைவாழ் மறைஞான சம்பந்தர் தாளின்மதி

கைவா ழுமாபதியார் காட்சிமிகு ‡ செய்ய         ( 258 )

 

வருணமச்சி வாய ரமைசித்த ராய

கருளில் சிவப்பிர காசர் ‡ தெருள்செய்            ( 259 )

குருநமச்சி வாயர் குலவுமறை ஞானர்

திருவம் பலவாண தேவர் ‡ மருவு         ( 260 )

 

முருத்திர கோடியா ரொப்பில்வே லப்பர்

திருத்தி யினிதருளச் செய்து ‡ பொருத்து          ( 261 )

 

மிருகுமர சாமிகண்மா சில்லா மணியா

ரருமை யிராமலிங்க ரன்பார் ‡ பெருமையிரு             ( 262 )

 

வேலப்ப ரென்று மிளிர்திருச்சிற் றம்பலவர்

பாலக்க ணில்லம் பலவாணர் ‡ சால              ( 263 )

 

வருள்சுப் பிரமணிய ரம்பல வாணர்

தெருள்சுப் பிரமணிய தேவர் ‡ பொருள்சான்       ( 264 )

 

மரபு நிலையிதுவால் வார்த்தைநீ பேசப்

பரவு சமயம் பகர்வேன்.            ( 265)

 

திருவாவடுதுறை ஆதீன வித்துவான்

சபாபதிநாவலர் அவர்களியற்றிய

 

செய்யுள்

அருட்பெருங் குருவா யம்பல வாண

வமலனா ரளப்பிவ்பே ரருளின்

அளித்தவா சிரிய வொருதனி முதன்மை

யப்பர னேகொள வருளி

இருட்பெருங் கடலி னுமையயடுத் தாள

வேன்றுநம் விபூதிக ளாகி

யயழுந்த ளபா சுப்பிர மணிய

ரெண்ணில ரவருள்யா மொன்றாய்ப்

பொருட்பெற வாரே மலர்க்கெலாம் பரமாய்ப்

பொருந்திடு சம்புபக் கமனப்

புகரற நின்ற சிவகுரு வாவேம்

போதரா தாசங்கை யிதன்கட்

டெருட்பெற வுணர்தி ரென்றடி யேமைத்

தெருட்டிமெய்ப் பூரண முற்றாய்த்

திருத்தகு துறைசைச் சுப்பிர மணிய

தேசிக ராசசின் மயனே.

 

திருவாவடுதுறை ஆதீன கர்த்தராய் வீற்றிருந்தருளிய இச்சுப்பிரமணிய தேசிக சுவாமிகளிடத்தும் அவ் ஆதீன மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடத்துங் கல்வி பயில் மாணவர்களில் சிறந்தவரும், சென்னை, பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதருமாகிய உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் அவர்களால் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிரபந்தத்திரட்டின் உரிமையுரை.

 

நேரிசை ஆசிரியப்பா

 

பூமலி துணர்ச்சினைக் காமலி கூலப்

பொன்னிமா நதிபாய் சென்னிநாட் டிடைவளம்

நிறையூ ராய வுறையூர்க் குணபாற்

கருமுதிர்ந் தயவுறு மொருமக ளஞரறத்

 

தாயான செல்வந் தங்குமாத் தலமாய்த்                  ( 5 )

துரிசிரா திலங்குந் திரிசிரா மலையில்

உதித்தொளி மிகுத்தே கதித்தறு மணியும்

மலர்தொறு நறவுகொள் வண்டின மேய்ப்ப

பலரிடைக் கல்வி பயின்றோங் கண்ணலும்

 

யாவரு மென்று மேவரும் புலமை

வாய்ந்துநூல் பலமிக வாய்ந்துகிள ரேந்தலும்

சுவைநெறி பனுவல்க ளவைபல வியப்ப

எளிதிற் பாடிய வளிகிளர் குரிசிலும்

புவித்தலம் வியப்பச் சிவத்தல புராணம்

 

பலசெய் தோங்குசீர் படைத்தசீ ரியனும்

நலமா ணாக்கர் பலபேர்ப் புரந்தே

அன்னர் குழாத்திடை நன்னர் மேவி

நூல்பல பயிற்றிச் சால்புறு பெரியனும்

அருத்திகூ ரெனையரு கிருத்திநூல் பலசொற்

 

றல்ல லகற்றிய நல்லிசைப் புலவனும்                   ( 20 )

நன்றிபா ராட்டுநர் நடுநா யகமும்

நிலமலை நிறைகோன் மலர்நிகராய

மாட்சிசால் புகழ்மீ னாட்சிசுந் தரம்பே

ருடையனுங் குவளைத் தொடையனுஞ் சுவைசெறி

 

இதிலுள நூலெலா மியம்புமா கவிஞனு                  ( 25 )

மாயவன் றனைத்தன தவைக்களத் தலைவனாச்

செய்தவ னெவனோ கைதவமிலாது

சொன்மழை சொரியுமச் சுகுணமா மலைபாற்

பொன்மழை பொழிந்தருள் பூத்தவ னெவனோ

 

செய்யுண்மற் றிவன்போற் செய்குநர் யாரிவன்                   ( 30 )

செய்யுள்போ லினித்தில தெரியின்மற் றவையயன்

றுணருமா றெவர்க்கு முறைத்தவ னெவனோ

பன்மா ணவர்கட் கின்மாணணியூ

னுடுக்கையா திகளளித் துறுதரந் தெரிந்தே

யிலக்கியம் பலவு மிலக்கண மைந்து

ஞானநூல்களு நவின்றவ னெவனோ

வடமொழி தென்மொழி வாய்ந்தபன் னூல்கள்

கற்றவர் சிரகர கம்பிதஞ் செயவாங்

குற்றநுண் பொருளெடுத் துரைத்தவ னெவனோ

 

ஆதுலர்க் கெய்ப்பில் வைப் பாயவ னெவனோ            ( 40 )

என்னுள மகலா திருப்பவனெவனோ

எண்ணியதலத்திடு புண்ணிய னெவனோ

திரிகூ டப்பெயர்ச் சிலம்பயற் றோன்றித்

துறைசையம்பறுசெய் நிறைதவப் பயனாச்

 

செப்புற மெய்ப்புகழ்ச் சுப்பிர மணிய               ( 45 )

தேசிகப் பெயர்கொடு திகழ்ந்தவ னெவனோ

அன்பருக் குலவா வின்பரு ணிமித்தந்

தீபகம் போன்றவ னெவனோ வவன்றன்

ஞாபகச் சின்னமா நன்கிதை

 

அன்புட னுரிமை யாக்குவ னினிதே.        ( 50 )

திருவாவடுதுறை ஆதீனவித்துவான்

மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய

 

திருவிடைமருதூர் திரிபந்தாதி

குருவணக்கம்

 

கட்டளைக் கலித்துறை

 

பெரும்புங் கவர்புகழ் கோமுத்தி வாழ்சுப் பிரமணிய

வரும்புங் கவன்பதம் யான்றொழ வென்கை யருட்குறியயான்

றிரும்புங் கரைய வெடுத்தளித் தானதை யேத்தல் செய்வேன்

கரும்புங் கனியு மெனவன்பு சாருங் கதியுமுண்டே.

 

உத்தமதானபுரம் வே. சாமிநாதையர் அவர்கள்

ஞானதேசிகரைத் துதித்த பாடல்கள்

 

பதினேழாவது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தமது பரிவாரங்களுடன் ( 1885 மார்ச்சு ) தாரண ஆண்டு மாசிமாதம் மகாமக தரிசனத்துக்குக் கும்பகோணம் பேட்டை மடத்திலே வந்து எழுந்தருளியிருந்தார்கள். அப்பொழுது சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோவில்தெரு மடத்திலுள்ள வித்துவான் ஸ்ரீ ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகளிடம் படித்துவந்த ஒரு குட்டித் தம்பிரானையும் அழைத்துக்கொண்டு வந்து திருவண்ணாமலை ஆதீன மடத்துக் காரியஸ்தர்களில் முக்கியமானவர்கள் மகா சந்நிதானத்தைத் தரிசித்து வணங்கினார்கள். ஞானதேசிகருடைய திருக்கடைக் கண்ணோக்கம் அக் குட்டித்தம்பிரான்பால் விழுந்தது. பின்பு, அவர் துழாவூரிலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே அபி´க்தர் மரபிலே தோன்றியவர் என்பதையும், வடுகநாத பண்டாரம் என்பவருடைய குமாரர் அருணாசலம் என்னும் அபிதானமும் உடையவர் என்பதையும், அறிந்து கொண்டார்கள். அதன்பின் நல்லநாளிலே தமதாதீனத்துக்கு அவரை  வரவழைத்து வரச் செய்து சிறந்த ஆசிரியர்கள் முகமாகக் கல்வி பயிற்றுவித்தார்கள். மூவகைத் தீக்கையாதிகளையும் முறையே செய்து சிவஞானோபதேசமும் இவ்வாதீன முறைப்படி சைவ சந்நியாசமும் கொடுத்து அம்பலவாணர் என்ற தீட்சா நாமமும் செய்தருளினார்கள்.

ஸ்ரீ அம்பலவாணருடைய கம்பீரத்தையும், அழகையும், செளலப்ய குணத்தையும் கண்டு மகிழ்வார்கள். இவர் பட்டத்துக்குத் தக்கவரே என எண்ணி மன நிறைவுடையராயினர் ஞானதேசிகர். இவ்வாறாக 7‡1‡1888ல் இவருக்கு ஆசாரியாபிடேகமும் செய்தருளி, ஞானதேசிகர் அன்று மாலை 4 மணியளவிலே திருவாவடுதுறையில் சிவபரிபூரணமாயினர்.

சர்வசித்து வருடம் 18ம் தேதி ஆசாரியபிடேகம் செய்வதாக நன்னாள் பார்த்துப் பத்திரிகையும் வெளியிட்டுள்ளார்கள். ஞானாசிரியர் தம்முடைய திருமேனி நிலையின்மை குறித்து மார்கழி மாதம் 25ம் தேதி சனிக்கிழமை சுவாதி நாளிலே பகல் பன்னிரண்டு மணிக்கு ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு ஆசாரியாபிடேகம் விரைந்து செய்தருளினார்கள்.

தமது ஞானாசிரியராகிய மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணியதேசிக மூர்த்திகள் சிவபரிபூரணமான பின்பு 10 நாட் குருபூசையும், மாகேசுர பூசையும் சிறப்புற இயற்றி தாம் ஞானபீடத்தில் அமர்ந்தருளுவாராயினர். அம்பலவாண தேசிகர் தமிழ்ப் பயிற்சி மிகுதியாக உடையவர். வடமொழியினும் வல்லவர். சிறந்த நூல்களுக்கு வடமொழியில் இவர் வழங்கியுள்ள சிறப்புப்பாயிரங்களால் அப்புலமை இனிது புலப்படும். கல்லிடைக்குறிச்சி வித்துவான் ஸ்ரீ முத்து சாஸ்திரிகளிடம் வடமொழி பயின்றார். மகாவித்துவான் பிள்ளையவர்களுக்குப் பின்பு இவ்வாதீன வித்துவ சிரோமணியாக இருந்த ஸ்ரீ சபாபதி நாவலர், தியாகராச செட்டியார் முதலியோரிடம் தமிழ்க்கல்வி பயின்றார். ஞானதேசிகராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகமூர்த்திகளிடம், திருமந்திரம், தேவாரம், திருவாசகம் முதலிய அருட்பாக்களையும் கற்றுத் தெளிந்தார். திருமுறைகளில் இவருடைய நுண்ணறிவு நன்றாகச் சென்று திளைத்திட்டமையின் பலவகையான குறிப்புகள் எழுதிச் சேகரித்தார். ஆதீனத்துப் புத்தகசாலையிலே உள்ள ஏட்டுச் சுவடிகளில் பலவற்றைத் தமது திருக்கரத்தால் காகிதங்களில் பிரதி செய்து உயர்ந்த பட்டுக் கட்டிடங்களால் அழகுபடுத்திப் பொன்முலாம் பூசி நன்கு பாதுகாத்துள்ளார்கள். இசைப் பயிற்சியிலும் இணையற்றவர்கள். சங்கீத சம்பந்தமான பல குறிப்புக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். இயல், இசை, நாடகம் ஆகிய முத்திறத்திலும் மூதறிவுடையவர்களென்னலாம்.

ஆதீன குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் தம் திருக்கரத்தினால் எழுதியுள்ள சிவஞானபோத மாபாடியத்தை மூன்று முறை பெயர்த்துக் காகிதப் பிரதி பண்ணியுள்ளார்கள். அருங்கலை வினோதர் எப்பொழுதும் இடைவிடாமல் வித்துவான்களுடைய மத்தியிலே விளங்குவார்கள். வித்துவான்கட்குச் சம்மானம் செய்வதில் இவர்களைப் போஜன் என்றும் கர்ணன் என்றும் பாராட்டுவார்கள். திருவாவடுதுறை ஆதீனத்திலே சம்மானம் பெற்றவர்கள் வேறு இடங்களிலே சென்று சம்மானம் பெறுதற்கு மனமில்லாதபடி வாரி வாரி வரிசையறிந்து வழங்குவார். புலவர்களை வரிசையறிந்து சம்மானம் செய்வதில் ஸ்ரீ அம்பலவாணதேசிகருக்கு முன்னும் பின்னும் கொடையாளிகள் இல்லை யயன்னலாம்.

திருவாவடுதுறைப் புத்தகசாலை ஆதீனத்தின் சார்பில் ஒரு நல்ல புத்தகசாலை அமைக்கவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. இயல்பாகவே ஒரு புத்தகசாலை ஆதீனத்தில் இருந்தாலும், அதைப் பின்னும் விரிவுபடுத்தித் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், தெலுங்கு முதலிய பாஷைகளில் உள்ள பலவகையான அச்சுப் புத்தகங்களையும் வாங்கி வைக்க வேண்டுமென்றுஎண்ணினார்., புத்தகசாலைக்குரிய இடமாக ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டுவித்தார். இப்போது “சரஸ்வதி மஹால்’ என்று வழங்குவது அதுவே. அப்போது 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கப்பெற்றன. இராமநாதபுரத்து மகாராஜா ஸ்ரீ பாஸ்கர சேதுபதி அவர்கள் 31‡1‡1895ல் திருவாவடுதுறைக்கு வந்தார். 30ந் தேதியில் “வித்தியாநிதி’ என்ற பெயருடன் புத்தகசாலை திறக்கப்பட்டது.  பாஸ்கர விலாசம் என்ற பெயருடன் உள்ள மிகப் பெரிய கீற்றுக் கொட்டகையில் சேதுபதி வரவேற்கப்பட்டு உபசரிக்கப்பெற்றார், அப்போது நமசிவாயமூர்த்திகள் குருபூஜை.

ஸ்ரீ பஞ்சாக்கர மகாமந்திரத்தை ஒரு கோடி எழுதித் தொகுத்து அச்சிடுவித்து கட்டடமாக்கி அழகாக வைத்துள்ளார்கள். இவர்கள் ஞானமா நடராசப் பெருமானையும், திருநமசிவாய தேசிகோத்தமரையும், பூசனை புரிந்துகொண்டும், தம்மை நாடிவரும் பக்குவமுள்ள சீடர்களுக்கு சித்தாந்த ஞானோபதேசம் செய்து கொண்டும் வருவாராயினர்.

ஸ்ரீ அம்பலவாணதேசிகர் தமக்குப் பின் தோன்றலாக வைத்தியநாதத் தம்பிரான் என்பவருக்கு ஆசாரியாபிடேகம் செய்து சுப்பிரமணிய தேசிகர் என்னும் தீட்சாநாமும் கொடுத்துப் பட்டத்திலே அமர்ந்தருளச் செய்தார்கள். ஒரு சித்திரைத் சதயத்திலே திருவிடைமருதூரில் சிவபரிபூரணம் எய்தினர். (கி.பி. 1888‡1920 )

 

பதினெட்டாவது ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

தமது ஞானாசிரியராகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சிவ பரிபூரணம் ஆன பின்பு பத்துநாள் குருபூசையும், மாகேசுர பூசையும் சிறப்பாக இயற்றித் தாம் ஞானபீடத்தில் அமர்ந்து அனைவருக்கும் குருதரிசனக்காட்சி நல்கியருளினர். இவர்கள் திருக்கழுக்குன்றத்திலே பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே தோன்றினார்கள். தமிழ், ஆங்கிலம், வடமொழி முதலிய மொழிகளை நன்கு கற்றுத் தேறியவர்கள், உலகியல் அறிவு மிகுதியாகப் படைத்தவர்கள். நிர்வாகத் திறமை மிக்கவர்கள். இவர்கள் பட்டமேற்ற பின்பு கொடையினால் சிறந்த புகழ் இவர்கள் கீர்த்தி மிகப் பெரியதாயிற்று. இவர்களைக் கழுக்குன்றம் பண்டாரச்சந்நிதி என்பர், இவர்கள் திருவாவடுதுறையிலே தைமாதம் பரணி நாளிலே சிவபரிபூரணமுற்றனர். (கி.பி. 1920‡1922)

பத்தொன்பதாவது ஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பின்பு பட்டம் ஏற்றவர்கள் ஸ்ரீ வைத்தியலிங்க தேசிக மூர்த்திகள் ஆவர். இவர்கள் பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே தோன்றியவர்கள். சோழ வளநாட்டினர். இளம் பிராயத்திலே இவ்வாதீனத்தை அடைந்து மூவகைத் தீட்சையும் முறையே பெற்றுச் சைவ சந்நியாசமும், வைத்தியலிங்கத் தம்பிரான் என்ற தீட்சா நாமமும் பெற்று அடியார் கூட்டத்து விளங்கியிருந்து தட்சிணத்திலே காறுபாறாக நீண்டகாலம் இருந்து சிறந்தவர்கள். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பின் அவர்களால் ஆசாரியாபிடேகம் செய்யப்பெற்று 1922ல் பட்டம் ஏற்றார்கள், மிகச் சிறந்த நிர்வாகத் திறத்துடன் இருந்து சிவக்ஷேத்திர பரிபாலனமும், குருக்ஷேத்திர பரிபாலனமும் செய்தவர்கள்.

இவர்கள் சுப்பிரமணிய மந்திரசித்தியும் வாக்குப் பலிதமும் உடையவர்கள், திருமுறைப்பற்று மிக்கவர்கள். ஸ்ரீ ஞானமாநடராசப் பெருமானையும், திரு நமசிவாய தேசிகோத்தமரையும் நாடோறும் வழுவாது நற்பூசனை செய்து வருவார்கள். தம்மை நாடிவரும் அன்பர்களுக்கு சித்தாந்த சாத்திரோபதேசமும் செய்து வரலானார். ஆண்டுதோறும் மாயூரம் துலாமதியில் கடைமுக ஸ்நானத்திற்கும், திருவிடைமருதூர் தைப்புஷ்யத் தினத்தன்றும் புனித நீராடுவதற்கு எழுந்தருளி சிவிகையில் பவனிவரும் காட்சி மறக்க முடியாததொன்றாம், இவர்கள் மாயூரத்திலே ஐப்பசி மாத அவிட்ட நாளிலே சிவ பரிபூரணமாயினர். (கி.பி. 1922‡1937).

 

இருபதாவது ஸ்ரீ அம்பலவாண தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

இத்தேசிக மூர்த்திகள் கி.பி. 1937 நவம்பர் மாதத்தில் மாயூரம், மாயூரநாதர் தெற்கு வீதியில் உள்ள இவ்வாதீன கட்டளை மடத்தில் பத்தொன்பதாவது குருமகா சந்நிதானம் ஸ்ரீ வைத்தியலிங்க தேசிக மூர்த்திகளிடம் சிவ ஞானோபதேசமும், ஆசாரியாபிடேகமும், ஸ்ரீ அம்பலவாண தேசிகர் என்னும் தீட்சா நாமமும் பெற்று விளங்கினார். ஸ்ரீ வைத்தியலிங்க தேசிகர் சிவபரிபூரணமான பின் 10 நாட்கள் வரை குருபூசையும் மாகேசுர பூசையும் சிறப்புறவியற்றி, குருதரிசனக் காட்சி நல்கி அனைவர்க்கும் விபூதிப் பிரசாதம் நல்கி அருளினர். பின் இவர்கள் திருவாவடுதுறையை அடைந்து மாசிலாமணி ஈசுவரரையும், ஒப்பிலாமுலை அம்மையையும் தரிசித்து, திருமூல தேவரையும் தரிசித்து, மடத்து வடக்கு வாயிலை அடைந்து சிவப்பிரகாச விநாயகரையும் வணங்கிக் கொண்டு, பின்னர் திருமாளிகைத் தேவரையும், ஆதீன பிரதம பரமாச்சாரியர் ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்திகளை வணங்கி வாழ்த்திக் கொண்டு, பின் ஒடுக்கத்தில் எழுந்தருளி, ஞானபீடத்தில் அமர்ந்து அன்பர்களுக்கு குருதரிசனக் காட்சி நல்கி, விபூதிப் பிரசாதம் அனைவர்க்கும் வழங்கி அருளினர்.

ஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் தென்பாண்டி நாட்டிலே திருநெல்வேலிச் சீமையிலே கொற்கை நகரத்திலே அவதரித்தவர்கள். கல்வி கற்றுச் சிறந்து, தமது பத்தொன்பதாவது பிராயத்திலே இந்த ஆதீனத்தைச் சேர்ந்த செவ்வந்திபுரத்திலே தட்சிணம் காறுபாறாக அப்போது எழுந்தருளியிருந்த வைத்தியலிங்கத் தம்பிரான் சுவாமிகளையடைந்து தமக்குள்ள துறவு விருப்பத்தையும், இந்த ஆதீனத்துத் திருக்கூட்டத்திலே சேரவிருக்கும் ஆசையையும் தெரிவித்தார்கள். அவர்கள் இவர்களைச் சோதித்து வேதாந்த நூற்பயிற்சியால் உண்டாகிய துறவுள்ளத்தைக் கண்டு வியந்து, இவ்வாதீன முறைப்படி மூவகைத் தீட்சையும் செய்து கல்லாடையும் அருளினார்கள். பிள்ளைத் திருநாமம் வைகுண்டம் பிள்ளை என்பது. தீட்சாநாமம் வைத்தியலிங்கத் தம்பிரான் என்பர்.

அதன் பின்பு திருவாவடுதுறை ஆதீனத்தில் அப்பொழுது 17ஆவது குருமகா சந்நிதானமாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகளைத் தரிசித்து, அவர்களது கட்டளையின்படி அணுக்கத்தொண்டுகள் செய்து கொண்டிருந்தார்கள். இவ்வாதீன வித்துவானாக இருந்த சேற்றூர் ரா.சுப்பிரமணியக்கவிராயர் அவர்களிடத்துத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களையும், சைவ சித்தாந்த நூல்களையும் முறையாகக் கற்றுத்தேர்ந்தார்கள் திருமுறைகளிலும் நல்லபயிற்சி பெற்றார்கள்.

திருமூலதேவ நாயனார் அருளிச் செய்த திருமந்திரமாலையிலே இவர்களுக்குப் பற்று அதிகம் இருந்தது.

பின்பு திருப்பெருந்துறைக் கட்டளைத் தம்பிரான் சுவாமிகளாக இருந்து பணியாற்றி வந்த காலத்திலே யாவரும் அதிசயிக்குமாறு இவர்களுக்குத் திருமந்திர உபதேசமும் கிடைத்தது. ஸ்ரீ வித்தியா உபாசனையும் உடையவரானார்கள். அதன்பின்பு, இவர்களுடைய நிர்வாகத்திறன் முதலிய எல்லாவற்றையுங் கருதி இந்த ஆதீனத்துப் பத்தொன்பதாவது குருமகாசந்நிதானம் ஸ்ரீ வைத்தியலிங்க தேசிக மூர்த்திகள் திருவிடைமருதூர்க் கட்டளையில் வைத்தருளினார்கள் திருப்பெருந்துறை, திருவிடைமருதூர் முதலிய இடங்களில் கட்டளையிலிருந்து மிகவும் நன்றாக நிர்வாகம் செய்து மகாசந்நிதானத்துக்குத்  திருவுளமகிழ நடந்து  கொண்டார்கள். ஆதலால், ஸ்ரீ வைத்தியலிங்க தேசிக மூர்த்திகள் தமக்குப் பின்னர் இவர்களையே பட்டத்திலிருத்த நன்கு திருவுளம்பற்றியிருந்தார்கள். ஸ்ரீ பஞ்சாக்கர பரமாசாரியருடைய திருவருட் குறிப்பும் இவர்கள்பால் சிறந்தோங்கியது. அதனால் ஸ்ரீ வைத்தியலிங்க தேசிக மூர்த்திகள் இவர்களுக்கு ஈஸ்வர ஆண்டு ஐப்பசித் திங்கள் 24ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆசாரியாபிடேகம் செய்து அம்பலவாண தேசிகர் என்னும் சிறப்பு அபிதானமும் அருளி தாம் 26ஆம் நாள் வியாழக்கிழமையன்று மாயூரத்திலே இவ்வாதீன கட்டளை மடத்திலே சிவபரிபூரண மெய்தினர்.

குருமகாசந்நிதானம் அவர்கள் நல்ல காரியங்கள் ‡ தேசப் பணிக்கான பொதுக்காரியங்கள் எவையாயினும் அவற்றிற்குத் தக்க பேருதவிசெய்யும் பெருவிருப்பம் உடையவர்கள். உதாரணமாக, அரசாங்க பொறுப்பு ஏற்றுக்கொள்வதற்கு முன்னர், கனம் இராஜேந்திரபிரசாத் அவர்கள் கஸ்தூரிபாய் நிதிக்காகத் தென்னாடு விஜயம் செய்தார்கள். அப்போது மகா சந்நிதானம் அவர்களைத் தரிசிக்க விரும்பினார். மடத்திற்கு அவர்களை அழைத்து மகாசந்நிதானம் ரூபாய் 35000.00 நன்கொடை வழங்கி அருளினார்கள்.

இந்தியதேசம் 14‡08‡1947  இரவு 11.45 மணிக்கு விடுதலைபெற்றது ; சுதந்திரம் ஏற்றது. அப்போது நமது இந்திய பிரதமமந்திரி கனம் ஜவஹர்லால்நேரு. அப்போது குருமகாசந்நிதானம் அவர்கள் சைவச் சின்னமாகிய ரி­ப முத்திரையோடு கூடிய ஒரு தங்கச் செங்கோலை டில்லியில் ஆதீனத்துப் பெரிய தம்பிரான் சுவாமிகள், ஓதுவாமூர்த்திகள், பெரிய காரியஸ்தர்கள் முதலியவர்களை அனுப்பி கொடுக்கச் செய்தார்கள். அப்போது ஆதீன ஓதுவாமூர்த்திகள் அவர்களால் “”அரசாள்வர் ஆணை நமதே” என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் தேவாரம் ஓதப்பெற்றது.

குருமூர்த்திகள் பீடாதிபதியாக எழுந்தருளியது முதல் முன்னேற்றத்தையே மிகவும் திருவுளத்தடைந்து எல்லாவகையிலும் சிறப்புறச் செய்தார்கள். பொதுமக்களுக்கு வேண்டிய கல்வி, மருத்துவம் முதலிய இன்னோரன்ன உதவிகள் பற்பல செய்தார்கள். மற்றும் செந்தமிழ்மொழி வளர்வதற்கான எல்லாம் சிறக்கச் செய்வித்தார்கள். ஆதீன வித்துவான்களைக் கொண்டு அரிய நூல்கள் பல ஆராய்ந்து அச்சிடுவித்து அன்பர்களுக்கெல்லாம் வழங்கி அருளினார்கள். குருமகாசந்நிதானம் அவர்கள் அன்பர்களும் அடியார்களும் வேண்டிக் கொண்டபடி விகிருதி ஆண்டு ஆவணி மாதம் 22ம் நாள் வியாழக்கிழமை தென்னாட்டுச் சிவதல யாத்திரைக்குத் திருவாவடுதுறையினின்றும் புறப்பட்டுத் தம்பிரான் சுவாமிகள், பரிவாரங்கள் உடன்வர, பல்லக்கிலேயே எழுந்தருளி அங்கங்கே சிவதரிசனம் செய்து வழிபாடாற்றி, அடியார்களுக்குக் குருதரிசனக் காட்சி தந்து உலகமெல்லாம் ஒருங்கே குதூகலிக்கத் திரும்பி, விகிர்தி வருடம் தை மாதம் 29ம் தேதி தமது சிவராசதானியாகிய திருவாவடுதுறைக்கு எழுந்தருளி, ஆதீனப் பிரதம பரமாசாரியராகிய ஸ்ரீ பஞ்சாக்கர தேசிக மூர்த்திகளுக்குச் சிறப்பாகச் செய்வித்து யாவரும் மகிழ வீற்றிருந்தருளினார்கள்.

இவர்கள் காலத்தில் ஸ்ரீ வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளை நாகர்கோவில் ஸ்ரீ ஆறுமுகம் பிள்ளை, ஸ்ரீ த.ச. மீனாட்சி சுந்தரம் பிள்ளை முதலியோர் ஆதீன வித்துவான்களாக இருந்து தொண்டாற்றி வந்தனர்.

இவர்கள் திருக்கூட்டத்து அடியவர்களுள்ளே பல்லாற்றாலும் சிறந்த பெரிய பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகளுக்கு, ஆசாரியாபிடேகம் செய்வித்து தமக்குப் பிற்றோன்றலாய் அவர்களுக்கு ஸ்ரீ சுப்பிரமணியதேசிகர் என்ற சிறப்பபிதானமும் கொடுத்தருளி பட்டத்திலே அமர்ந்தருளச் செய்தார்கள்.

இவர்கள் திருவிடைமருதூரில் விகிர்தி வருடம் பங்குனி மாதம் 30ஆம் நாள் வியாழக்கிழமை சிவபரிபூரணம் அடைந்தார்கள். இவர்கள் பட்டத்தில் இருந்தது (கி.பி. 1937 ‡ 1951 )

 

இருபத்தொன்றாவது ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் சரித்திரம்

திருச்சிற்றம்பலம்

 

கருணைக்கடலாகிய ஸ்ரீ நமசிவாய மூர்த்தியினுடைய திருவுள்ளக் கனிவு ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக பரமாசாரிய சுவாமிகள் மீது பரவிற்று. அதனாலேயே அவர்கள் இருபத்தோராவது குருமகா சந்நிதானமானார்கள். ஸ்ரீ ஞானமா நடராஜப் பெருமானின் நல்லருளும் துணைசெய்தது, அதனால் அவர்கள் விக்ருதி வரு­ம் பங்குனி மாதம் முப்பதாம் நாள் குருவாரத்தில் ஞானபீடத்தில் எழுந்தருளினார்கள். இவர்களுடைய அவதாரஸ்தலம் பிறக்க முத்தி தரும் தலமாகிய திருவாரூர். சைவ வேளாள மரபிலே அபி´க்த குலத்திலே சாமிநாததேசிகர் என்பவருக்கு இரண்டாவது திருக்குமாரராகத தோன்றினார்கள். இளமையிலேயே சிவதீட்சையும் சைவ சீலமும் பெற்று விளங்கினார்கள். பின்பு நல்லூழ் கூட்டத் திருவருளால் திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவ சந்நியாசம் பெற்றுப் பணிபல புரிந்து வந்தார்கள். இவர்கள் பட்டத்தில் அமர்ந்த பின்னர் வித்துவான் திருவாளர் ச. தண்டபாணி தேசிகர் அவர்களை திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானாக நியமனம் செய்தார்கள்.

ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் நேர்மைக்கு உறைவிடம் அதனால், அவர்கள் எல்லாரிடமும் நேர்மையையும், சத்தியத்தையுமே எதிர்பார்த்தார்கள். அவரவர்களின் தரத்துக்கும் உழைப்புக்கும் ஏற்ப ஊதியத்தையும் உதவியையும் உரிய காலத்தில் உதவி வந்தார்கள். இவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்ததும் சொத்துப் பராமரிப்பும் கிராம மராமத்தும் வருவாய் பெருக்க வழிகளும் அதிகமாகக் கவனிக்கப்பட்டன. நிர்வாக சம்பந்தமாக முன்னறிவிப்பின்றித் திடீரென்று விஜயம் செய்யச் சம்பிரதாயப்படியுள்ள பல்லக்குச் சவாரி பற்றாமையால் காரில் விரைந்து செல்வதாகத் திட்டம் மாற்றப்பட்டது. அது சம்பிரதாய ஏட்டிலே ஒரு புரட்சி எனலாம், கடிதோச்சி மெல்ல எறிதல் ஆட்சிக்கு அழகாதலின் சிப்பந்திகள் முதல் குத்தகை தாரர்வரை, குடிமக்கள் முதல் குபேரன்வரை எல்லாரையும் சமமாகப் பாவித்து குற்றம் நீக்கி குணம் பாராட்டுவதே இவர்களது தனிக்கொள்கை. தண்டனைபெற்ற தவறு செய்தவனுங் கூடத் தயவை எதிர்நோக்கிக் காத்திருந்து கருதிய காரியங்களை முடித்துக்கொள்ளுவான். அடிக்கின்ற கையே அணைக்கும் என்று பலபடப் பாராட்டுவான்.

நிர்வாகம், சமய சம்பந்தமான வைதீக காரியங்கள் அங்கமாக அமைந்தவை என்று ஆழமாக உள் மனத்திலே ஊன்ற வைத்தவர்கள். அதனால் கிளைமடங்களில் நித்திய நைமித்திய பூஜைகளும் மஹேஸ்வர பூஜைகளும் ஒழுங்காக நடக்கின்றனவா? மடாதிபதிகள் இந்நோக்கத்தைச் சரிவர நிறை வேற்றுகிறார்களா? என்பதைக் கவனிப்பதே இவர்களின் முதல்வேலை. அதிலும் சிறப்பாகப் பெரும்பாலும் எங்கெங்கே எவை எவை எந்தெந்த தர்மங்களுக்காக ஒதுக்கப்பட்டனவோ அவை அவை அவ்வத்துறையிலே நடக்க முயற்சி எடுத்துக் கொண்டார்கள்.

இவர்களிடத்திலுள்ள தனித்த சிறப்பான குணம் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் வீண் ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் செய்ய வேண்டுமென்பதே, யாராவது விளம்பரத்தைப் பற்றி வற்புறுத்துவார்களானால் “”நமக்கென்னய்யா நமசிவாய மூர்த்திகளின் சொத்து, நமக்கென்ன சம்பந்தம்” நமக்கு விளம்பரம் எதற்கு என்பார்கள். உள்ளதை உள்ளபடி காலப் போக்குக்கும் உலக நடைக்கும் ஒப்ப நடத்துவதே அறநெறி என்பதை நன்றாக உணர்ந்தவர்களென்பதை அவர்கள் செய்து வந்த தர்மமே எடுத்துக்காட்டும். அவர்கள் ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரி முதல் ஸ்ரீ காசிவரையுள்ள நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட திருமடங்கள் சீரிய முறையில் செப்பம் செய்யப்பட்டன.

சிதம்பரம், ஆளுடையார்கோவில் குருமுகூர்த்தம், திருவிடைமருதூர் குருமுகூர்த்தம், சிதம்பரம் சிங்காரத் தோப்பு குருமுகூர்த்தம், நாட்டுச்சாலை விநாயகர் கோவில், புளியங்குடி விநாயகர் கோவில், திருவாவடுதுறையில் ஆபீஸ் சிப்பந்திகள் வீடுகள் முதலியன புதிதாகக் கட்டப்பெற்றன.

பாசன வசதிக்காக அறுபதுக்கு மேற்பட்ட கிராமங்களில் குளம், கலுங்கு, கால்வாய், ஏரி முதலியவை புதிதாகக் கரை கட்டியும், ஆழமாக வெட்டியும், அணைகள் கட்டியும் பாது காக்கப்பட்டன. இவற்றினுள் மேக்கரை கிராமத்தில் கட்டிய அணை மிகச் சிறப்பானது. விளை நிலங்களின் அபிவிருத்திக்காக மராமத்துகள் செய்யப்பெற்றன. குத்தகைக்காரர்களை எதிர்பார்க்காமலே தழை, உரம் முதலியன தேவைக்குத் தக்கவாறு உதவப்பெற்றன. அதனால் நாட்டினுடைய உணவுப் பஞ்சம் ஓரளவு குறைக்கப்பெற்றது எனலாம்.

பட்டுக்கோட்டை தாலூகா எடுத்தணிவயல் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் நிலத்தைத் திருத்தி நஞ்சை சாகுபடிக்கு கொண்டுவந்தார்கள். சாகுபடி வசதிக்காகக் குடிமக்கள் குடியேற்றப்பட்டார்கள். அவர்களுடைய வழிபாட்டுக்காகவும் பக்கத்துக் கிராமங்களிலுள்ள மக்கள் வேண்டிக் கொண்டதற்காகவும் பெரும்பொருட்செலவில் ஸ்ரீ பஞ்சாக்கர விநாயகர் கோவில் கட்டப்பட்டது. பல லட்சார்ச்சனைகளும் இன்றுவரை இரண்டு காலபூஜையும் நடைபெற்று வருகின்றன.

உணவெனப்படுவது நிலனொடு நீரே என்பது சங்கச் செய்யுள். உணவிலும் சிறந்தது நீர் தான். குடிதண்ணீர் நன்றாக இருந்தால் மக்களுக்கு நோய் வருவதே இல்லை. குடி தண்ணீருக்குரிய கிணற்று வசதிகள் டெல்டாப் பிரதேசமாகிய தஞ்சை மாவட்டத்துக்குத் தேவையா? அதனால் மலைவளம் மிக்க காடும் கரம்பும் அதிகமான திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி முதலிய ஜில்லாக்களில் இருபதுக்கு மேற்பட்ட  கிணறுகள் புதிதாக வெட்டப்பட்டன. இவைகளில் பல பாசனத்துக்கும் வசதியான பெரிய கிணறுகள்.

தஞ்சை சிங்கிப்பட்டி க்ஷயரோக ஆஸ்பத்திரியில் நான்கு படுக்கைகள் அமைக்க இடவசதி செய்துதரப்பட்டது. அதற்கு ஆண்டுகள் தோறும் ரூபாய் பதினாயிரம் உதவி வந்தார்கள். கும்பகோணம் மகப்பேறு மருத்துவ விடுதிக் கட்டிடம்கட்ட பெருந்தொகை உதவி செய்யப்பட்டது. கும்பகோணத்திலும் மாயூரத்திலுமுள்ள டி.பி. கிளினிக் கட்டிடங்கட்கு தக்க உதவி செய்யப்பட்டது. கும்பகோணம் அரசாங்க மருத்துவ விடுதியில் எக்ஸ்ரே பிளான்ட் கட்டிடம் கட்ட உதவி செய்யப்பட்டது. தமிழ் வைத்தியமாக சித்த வைத்தியம் வளர மருத்துவர் ஒருவர் நியமிக்கப் பெற்றிருந்தார். பாம்பு முதலிய வி­க்கடி நீக்க “”வி­ராஜா” ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். ஆதீன மடத்திலேயே முதலுதவியும் நடைபெற்று வருகின்றது.

கட்டையன்காடு முதலான, ஆறு ஏழு இடங்களில் கிராம மக்களின் செளகரியத்திற்காகச் சாலைகள் அமைத்தும் பாலங்கள் கட்டியும் கொடுக்கப்பட்டன.

கும்பகோணம் அரசினர் கல்லூரி, அண்ணாமலைச் சர்வ கலா சாலை, சென்னை ராமகிருஷ்ணா ஹோம், திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணாகுடில் போலீஸ் என்.ஜி.ஓ. மாணவர்கள், பாளையங்கோட்டை குருடர்கள் பள்ளி, பொறி இயல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலைக் கல்லூரி இவற்றில் பயிலும் மாணவர்கள் பலருக்கு உபகாரச் சம்பளமும் மற்ற வசதிகளும் செய்து தரப்பட்டன.

ஆதீன நிருவாகத்திலேயே திருவிடைமருதூரிலே திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப்பள்ளி என்ற பெயரில் உயர்நிலைப்பள்ளி 1922ம் வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடைபெறுகிறது. அதில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களும் இருக்கின்றார்கள். மேற்படி பள்ளிக்காகச் சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில் ஒரு கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டது. திருவிடைமருதூர் வடக்கு வீதியில் சீனியர் ஆதாரப்பள்ளியும், துவக்கப்பள்ளியும் நடைபெறுகின்றன. அதிலும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலுகிறார்கள். திருவாவடுதுறையில் ஆதாரத் துவக்கப்பள்ளி ஒன்று நடைபெறுகிறது. இதிலும் 300 மாணவர்கள் பயிலுகிறார்கள். பெரும்பாலான மாணவர்களுக்கு மதிய உணவும் அளிக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி ஜில்லா, முறப்பநாடு, புளியங்குடி கிராமம் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மதிய உணவுக்கு நெல் இனாம் கொடுக்கப்பட்டு வருகிறது. திருவிடைமருதூர் உயர் நிலைப்பள்ளியில் றீ.றீ.ஸி.ளீ. யில் முதலாவதாகத் தேறும் மாணவருக்குத் தங்கப்பதக்கம் பரிசளிக்கப்பட்டு வருகிறது.

ஆதீனம் சரஸ்வதிமஹால் நூல் நிலையத்தில் சுமார் பத்தாயிரத்திற்குக் குறையாத புத்தகங்கள் பல மொழிகளிலும் உள்ளன. ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏடுகள் வாங்கிச் சேர்க்கப்பெற்றன. சிவாகம வித்துவான்களையும் இருமொழி வல்லுநர்களையும் வைத்து ஆகம பரிசீலனையும் நூல் ஆராய்ச்சியும் செய்யப்படுகின்றன. பழைய ஏடுகள் காகிதங்களில் பெயர்த்து எழுதப்படுகின்றன.

இசைக் கல்வி வளர்ச்சிக்காக நாட்டில் நடப்பிலுள்ள சிறந்த இசைவல்லுநர்களும், நாதசுர வித்துவான்களும், பிறகருவி வல்லவர்களும் பரிசு, வருடவர்த்தனைகள் வாயிலாகப் பாது காக்கப்பட்டு வருகிறார்கள்.

சமயப்பிரசாரம் இசையோடுகலந்து கொடுக்கப்படுமானால், சர்க்கரை கலந்த பாலாக இனிக்கு மென்பதைத் திருவுளத்திலே எண்ணி, எடுத்துக்காட்டாகவும் புது முயற்சியாகவும் தஞ்சையிலே ஒரு ஹரிகதா காலக்ஷேபக் கல்லூரி துவங்கப்பட்டது. அதற்கு ஆகும் செலவை ஆதீனம் ஏற்று நடத்தி வருகிறது.

னிழிdrழிவி ணூஐவிமிஷ்மிற்மிe லிக்ஷூ வீeஉஜுஐலியிலிஆதீ, கீழப்பெரும்பள்ளம் பள்ளிக்கூடம், திருநெல்வேலி சைவ வேளாளர் கல்வி அபிவிருத்திச்சங்கம், திருநெல்வேலி இந்து கல்லூரி, கும்பகோணம் கோபால்ராவ் நூல் நிலையம், லால்குடி பெண்கள் உயர்நிலைப் பள்ளி, வடகரை எலிமெண்டரி ஸ்கூல், புளியங்குடி ஆண்டியப்பா பெண்கள் உயர்நிலைப்பள்ளி, தஞ்சை ஆர்ட்ஸ் கல்லூரி, நாகர்கோவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டபம், நாட்டுச்சாலைப் பள்ளிக்கூடம் முதலியவற்றின் கட்டிடங்களுக்குப் போதுமான பொருள் உதவி செய்யப்பட்டது. மாயூரம் பு.V.ளீ. கல்லூரிக் கட்டிடத்திற்கும், பூம்புகார் கீழை நாட்டுப் பண்பாட்டுக் கல்லூரிக்கும், திருக்குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி மாணவிகள் விடுதிக்கும் தனித்தனியே லட்ச ரூபாய்கள் நன்கொடை வழங்கப்படடன. திருக்குற்றாலம் பராசக்தி கல்லூரிக்கு மகாசந்நிதானம் அவர்களே நேரில் எழுந்தருளி அடிக்கல் நாட்டிச் சிறப்பித்தார்கள். இவை இரண்டுமே ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்களுடைய கல்விக் கொடையின் தாராளத்தைக் காட்டப் போதுமான சான்றாகும். மேலும் தஞ்சை சரபோஜி கல்லூரிக்கும், மாயூரம் பு.V.ளீ. கல்லூரிக்கும் பெரும்பொருள் உதவப்பெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கலைப் பிரிவில் னி.பு, வகுப்பில் சிவஞானபோத மாபாடியத்தை விருப்பப்பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது. திருவானைக்காவல் பாப்பம்மாள் சத்திரத்தில் சுமார் 50 மாணவர்களுக்கு உணவும், உறைவிடமும், உபகாரச்சம்பளமும் அளிக்கப்பட்டு வருகிறது. மேற்படி கட்டிடங்களையும் புதுப்பித்து மாணவர்கள் படிக்க வசதி செய்யப்பட்டது.

ஆதீனத்திற்குச் சொந்தமான மாயூரம் ஸ்ரீ மாயூரநாத சுவாமிகோவில்திருப்பணியும் கும்பாபிஷேகமும் சுமார் நான்குலட்ச ரூபாயில் செய்யப்பட்டது. மற்றும் ஆங்காங்கு பதினேழாயிரம் ரூபாய் செலவில் இரும்புக் கதவுகள் போடப்பட்டன. பெரிய கொடிமரத்துக்கு ரூபாய் இரண்டாயிரம் செலவில் செப்புத்தகடு பதியப்பட்டது. ஆறுமுகநயினார், பெரிய விநாயகர் இவர்களுக்கு இருபத்திரண்டாயிரத்து எழுநூற்றுத் தொண்ணூறு ரூபாய் செலவில் வெள்ளிக் கவசங்கள் செய்யப்பட்டன. மரவாகனங்கள் புதுப்பிக்கப்பட்டன. சில வாகனங்கள் புதிதாகச் செய்யப்பட்டன. இந்தவகையில் செலவானது சுமார் ரூபாய் ஆறாயிரம்,  எண்ணாயிரம் ரூபாய்ச் செலவில் திருவாபரணங்கள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு லட்ச ரூபாயில் திருப்பணி தொடங்கி நடந்து வருகின்றது. ஆலய அலுவலகம் புதிதாகக் கட்டப்பட்டது. திருமுறைக் கோவிலும் நூல் நிலையமும் புதிதாக அமைக்கப்பட்டன. ஆண்டுகள் தோறும் புதிதாக நூல்கள் வாங்கிச் சேர்க்கப்படுகின்றன.

திருவாவடுதுறைக் கோயில் வசந்தமண்டபம் புதுப்பிக்கவும், திருக்கோபுரத்தின் வெளிப்புறச் சுற்றுச் சுவர்களை எடுக்கவும், தளவரிசை  அமைக்கவும், உள்மதிலைக் கொத்திச் சிமெண்டு பூசவும், சில்லரைப் பழுது பார்க்கவும், நாற்பத்தாயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவு செய்யப்பட்டது. சந்நிதியிலே இரும்புத் தள்ளுக்கேட்டுப் போடவும் கோபுர வாயிலில் இரும்புக் கதவுபோடவும் மகா நந்தியைச் சுற்றியும் ஆலய அலுவலகத்திலும் இரும்புக் கம்பிகள் அடைப்புகள் போடவுமாகப் பதினோராயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் செலவில் திருமூலதேவர் முன்மண்டபம் புதுப்பிக்கப்பட்டது. பஞ்சமூர்த்திகளும் வீதியுலாவரச் சகடைகள் இரண்டு மூவாயிரத்து இருநூறு ரூபாய் செலவில் புதிதாகச் செய்யப்பட்டன. ஆதி கோமுக்தீசுவரர் கோவில் ஆயிரம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப் பட்டது.

திருவிடைமருதூர்க் கோவில் மூகாம்பிகை சந்நிதி எதிர்மண்டபம், நூல் நிலையம், பிரசார மண்டபம், கோசாலை முதலியன புதிதாகக் கட்டப்பட்டன. மடைப்பள்ளி, அம்மன் கோவில் உட்பிரகாரம், கீழ்க்கோபுரத்தின் உட்பகுதி முதலிய இடங்கள் கருங்கல் தளவரிசை இடப்பட்டன. திருக்குளத்தில் நான்குபுறமும் சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டது. காற்றோட்டமில்லாத பகுதிகளில் ஜன்னல்கள் வைக்கப்பட்டன. இவற்றினுடைய செலவு சுமார் இரண்டு லட்சரூபாய் எனலாம்.

ஏகநாயகருக்கு வெள்ளிப் படிச்சட்டம் ரூபாய் 7980. படித்துறை விநாயகர் வெள்ளிக் கவசம் ரூபாய் 3515. வெள்ளிக் கைலாசவாகனம் ரூபாய் 32000. வெள்ளிரதம் ரூபாய் 70000. இவைகள் இவர்களுடைய ஆட்சியில் செய்யப்பட்டவை.

1960ல் சுமார் பதினாயிரம் ரூபாய்க்குமேல் செலவிட்டு நடராஜ மூர்த்தம் அமைக்கப் பெற்றது. அறுபத்துமூவர் திருவுருவங்களில் குறைந்திருந் தவையும் பின்னப்பட்டவையும் புதிதாக வார்க்கப்பட்டன. பிரதிஷ்டையும் செய்யப்பட்டன.

ரூ. 7000ம் செலவில் அறுபத்துமூவர் வீதி உலாவுக்கென்று புதிய மஞ்சங்கள் செய்யப்பட்டன. கார்த்திகைச் சோமவார அபிஷேகத்துக்காக 1008 சங்குகள் புதிதாக வாங்கித் தங்கம் கட்டி வைக்கப்பட்டன. பொது மக்களுக்குப் புரியும்வகையில் தலவரலாற்றுப் படங்கள் ரூ. 6000ம் செலவில் சந்நிதியில் எழுதப்பட்டிருக்கின்றன. திருமாளிகைப் பத்திகளில் இரும்புக்கேட்டுகள் போடவும், திருக்கோவில் முழுவதும் மின்சார விளக்குகள் புதுப்பிக்கவுமாக ரூபாய் 28,162 செலவழிக்கப்பட்டது. பதினாயிரம் ரூபாய்கள் செலவில் பிரசாரமண்டபமும் அதன் நடுவிலே நால்வர் திருவுருவங்களும் அமைக்கப்பட்டன.

நூல் நிலையத்தில் பழைமையான அரிய நூல்கள் ஆகமங்கள் வேதங்கள் புராண இதிகாச இலக்கியங்கள் ஏட்டுச் சுவடிகளாகச் சேமிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ரூபாய் 500க்கு குறையாமல் புதிய புத்தகங்கள் வாங்கிச் சேர்க்கப்படுகின்றன.

தேவஸ்தானத்தின் இலவச வெளியீடாக இதுவரை 34 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. தீர்த்தக்கரை ஸ்ரீ நாயடியார் கோவில் திருப்பணிசெய்து மகாகும்பாபிஷேகமும் செய்யப் பட்டது.

திருவிடைமருதூருக்குத் தரிசனத்திற்காக வருகின்ற தக்க மனிதர்களுக்கேற்ற தங்கும் விடுதி மிகமிகத் தேவையாக இருந்தது. அக்குறையைப் போக்கக் கீழக்கோபுரத்தின் தென்பக்கத்திலே அழகான மாளிகையயான்று எழுப்பப்பெற்றது. அதில் எல்லா வசதிகளும் நிரம்பியுள்ளன. அரசியல் அதிகாரிகளும், பெரிய மனிதர்களும் இப்பொழுது வந்து தங்கி வசதியாகத் தரிசனம் செய்து போகின்றார்கள்.

திருக்கோவில் முழுமையும் சீர்த்திருத்தம் செய்யத் திருவுளம் பற்றினார்கள். சுமார் பத்து லட்சம் ரூபாயில் விரிவான திட்டமிடப்பெற்றது. அதன்படித் திருப்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இவர்கள் ஆட்சி ஏற்ற ஆறாவது ஆண்டுமுதல் ஆண்டு தோறும் ஆவணி மாதம் தொடங்கித் தைப்பூசம் வரை இசையோடும் பொருள் உணர்ச்சியோடும் பன்னிரு திருமுறையும் பாராயணம் செய்யப்படுகிறது. பாராயண நிறைவு விழாவின் போது திருமுறை மாநாடும் அறுபத்து மூவர் திருவீதியுலாவும் தேவாரக் கோஷ்டியுடன் நிகழ்த்தப்படுகின்றன.

தைப்பூச விழா, வசந்தோற்சவ விழா இவற்றில் சிறந்த சொற்பொழிவுகள் நிகழ்த்துவிக்கப்படுகின்றன.

உயர்நிலைப் பள்ளியின் மாணவர்களைக்கொண்டு சமயாசாரியர்களின் வரலாற்று நாடகங்கள் பலவிடங்களில் சென்று பாராட்டுப்பெறும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றும் நல்லூர், சூரியனார்கோவில், திருவீழிமிழலை, திருமங்கலக்குடி, இலுப்பைப்பட்டு முதுலிய தலங்களில் இன்றியமையாத திருப்பணிகள் பல செய்யப்பட்டன. நல்லூர்க் கோவிலில் திருப்பணி தொடர்ந்து நடந்து வருகின்றது.

ஆதீனத் தொடர்பில்லாத சிதம்பரம் தெற்குச் சந்நிதி ஸ்ரீ காளியம்மன்கோவில், திருவாதவூர்க் கோவில், மைலாப்பூர் திருவள்ளுவர் கோவில், திருநாவலூர் ஸ்ரீ நாவலேஸ்வரர் கோவில் முதலான இருபத்திரண்டு கோவில்களுக்கு இவர்கள் ஆட்சிக் காலத்தில் திருப்பணி உதவி செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ நாகேசுரசுவாமி கோவில் திருநாகேச்சுரம் ஸ்ரீ நாகநாத சுவாமி கோவில், சிதம்பரம் நடராஜாகோவில் முதலான 40 கோவில்களுக்குத் தாராளமாகப் பண உதவி செய்யப்பட்டிருக்கிறது.

திருவிதாங்கூர் ஸ்டேட்டில் சுசீந்திரம், பூதப்பாண்டி, நாகர்கோவில் முதலான 12 கோவில்களின் திருவிழாக்களுக்கு உதவி அளிக்கப்பெற்று வருகிறது.

இவர்கள் ஆட்சி ஏற்ற ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்திலே ஆதீன வெளியீடுகள் அழகாகவும் விரைவாகவும் நிரம்பவும் வெளிவரவேண்டு மென்னும் நோக்கத்தால், அச்சுக்கள் இயந்திரம் முதலிய தளவாடங்கள் லட்ச ரூபாய்க்கு வாங்கப் பட்டன. லட்ச ரூபாய் செலவில் கட்டிடமும் கட்டப் பெற்றது. இன்றுவரை மேற்படி அச்சகத்தில் 310க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, கணபதி, முருகன், நவமணிகள், திருவாசகம், ஆடல்வல்லான், திருக்கோவையார், உண்மைவிளக்கம்,  திருமந்திர உரை போன்ற பல நூல்கள். அச்சகத்தை இந்திய அறநிலையக் கமி­ன் தலைவர் ஸர் ளீ.P. இராமசாமி ஐயர், இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர் முதலான பலர் பார்வையிட்டுப் பாராட்டி உள்ளார்கள்.

குடந்தைச் சிவனடியார் திருக்கூட்டம், சாரத்தூர்த் தமிழ்ச் சங்கம், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, திலகவதியார் மாதர் கழகம், பாகம்பிரியாள் மாதர்கழகம், தென்காசி திருவள்ளுவர் கழகம், பாளையங்கோட்டை திருப்புகழ்ச்சபை, சந்தி விநாயகர் கோவில் திருமுறைப் பாராயணசபை முதலியவற்றிற்கு ஆண்டுதோறும் உதவிநிதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆரல்வாய்மொழியில் “பன்னிரு திருமுறை நூல்நிலையம்’ என்ற பெயரில் ஒரு நூல் நிலையம் நிறுவினார்கள்.

திருவாவடுதுறை, தென்காசி, மேலகரம், இலஞ்சி, திருநெல்வேலி, சிந்துபூந்துறை, விக்கிரமசிங்கபுரம், மாயூரம், திருவிடைமருதூர் முதலிய இடங்களில் தேவாரப் பாடசாலைகள் அமைத்துப் பண்ணோடு தேவாரம் பயிற்றுவிக்கப்படுகிறது. விக்கிரமசிங்கபுரத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இலவசமே. அங்கங்கே படிக்கும் மாணவர்களுக்குத் தகுதிப் பரிசுகளும் பொதுப்பரிசுகளும் அவ்வப்போது வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

திருநெல்வேலி, தென்காசி, செங்கோட்டை, நாகர்கோவில் முதலிய பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட சைவப் பிரசாரகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் பெண்கள். அவர்கள் மாதந்தோறும் ஆறு இடங்களுக்குக் குறையாமல் சென்று சமயப்பிரசாரம் செய்ய வேண்டும். தஞ்சை, தென்னாற்காடு ஜில்லாக்களிலும் ஆதீன வித்துவான்கள் ஐவருக்கு மேல் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பலருக்கும் பயன்பட வில்லுப்பாட்டுக் கோஷ்டி ஒன்று பிரசாரத்திற்காக நியமிக்கப்பெற்றது.

ஆண்டுதோறும் விஜயதசமியன்று திருவெண்ணெய்நல்லூரில் ஸ்ரீ மெய்கண்டார் சந்நிதியில் சித்தாந்த சைவ மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் பண்டார சாத்திரங்கள் பதினான்கும் உரையுடன் வெளிவந்துள்ளன.

இவர்களுக்குத்திருவாசகத்தில் தனி ஈடுபாடு, ஆதலால் ஆளுடையார் கோவிலில் தொடங்கி ஆண்டுதோறும் திருவாசக மாநாடுகள் கூட்டப்படுகின்றன. அதில் திருவாசக விரிவுரை, திருக்கோவையார் உண்மை விளக்க உரை, திருவாசகத் தேன்துளிகள் ஒன்று முதல் பத்துவரை ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.

ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகளின் தைமாதக் குருபூஜைப் பெருந் திருவிழாவில் திருமந்திர மாநாடு கூட்டப்படுகின்றது. இவர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே மகா நாட்டைத் தொடங்கி வைத்தார்கள். இதில் பங்கு பெறாத பேரறிஞர்களே தமிழ்நாட்டிலே இல்லை எனலாம். இதுவரை ஏழுதந்திரங்கள் விளக்க உரையோடு வெளியிடப்பட்டுள்ளன. மூன்று தந்திரங்களுக்குக் கட்டுரைகளும் வெளிவந்திருக்கின்றன. திருமந்திரம் இதுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்தது. அதனை இவர்கள் பரப்பத் தொடங்கிய நாள்முதல் நாட்டில் ஒரு புதிய எழுச்சி உண்டாகியது. அதனால் சென்னைப் பல்கலைக்கழகமும், அண்ணாமலைப்பல்கலைக்கழகமும் தத்தம் ஆராய்ச்சிப் பிரிவில் திருமந்திரத்துக்கு முதலிடம் தந்திருக்கின்றன. இங்ஙனம் பல்கலைக் கழகங்களையும் திருமந்திரத்தைப் படிக்கவைத்த பெருமை ஸ்ரீலஸ்ரீ 21ஆவது குருமகாசந்நிதானம் அவர்களையே சாரும்.

ஸ்ரீ மாதவச் சிவஞானசுவாமிகள் ஆதீனத்திற்குக் கண் போன்றவர்கள். அவர்கள் பரிபூரணமான ஆயிலியநாள் மாகேசுவர பூஜை அவர்கள் அவதாரத்தலமாகிய விக்கிரமசிங்கபுரத்தில் மட்டும் நடந்துவந்தது. அவர்கள் பரிபூரணமான தலம் திருவாவடுதுறை, அவர்கள் சமாதிக்கோவில் திருவாவடுதுறையில் இருக்கிறது. அவர்களுக்கு பூசை திருவாவடுதுறையிலும் நடக்க வேண்டியது அவசியம் என்பதை யயண்ணி இரண்டு ஆண்டுகளாக அதற்குரிய திட்டத்தையும் வகுத்து மகாபிஷேகமும், மாகேசுர பூசையும் நடத்தி வந்தார்கள்.

இவையன்றித் திருவிதாங்கூர், சுசீந்திரம், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, நாகர்கோவில் முதலிய இடங்களில் நடக்கும் உத்ஸவங்களில் ஆதீன வித்துவான்களை அனுப்பிச் சமயப் பிரசாரங்கள் செய்வித்தார்கள். தேவாரக் கோஷ்டிகளை அனுப்பித் திருமுறையைப் பரப்பினார்கள். நாதசுரவித்துவான்களை அனுப்பி உத்ஸவத்தைச் சிறப்பித்தார்கள். அன்றியும் முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தி வந்தார்கள். ஓர் ஆண்டு மாநாட்டில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களே எழுந்தருளிச் சிறப்பித்தார்கள். அப்போது கவர்னராயிருந்த ஸ்ரீ வி.வி. கிரி அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள். ஓராண்டிலே ஸர்.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

ஆண்டுதோறும் திருவெம்பாவை திருப்பாவை மாநாடுகளை, சிதம்பரம் திருப்பாதிரிப் புலியூர், சென்னைத் திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவிடைமருதூர் முதலான இடங்களில் நிகழச் செய்து சிறப்பித்தார்கள். ஆண்டுதோறும் இருபத்தையாயிரம் பிரதிகளுக்கு மேலாகப் பாவை புத்தகங்கள் அச்சிடப் பெற்று அறநிலையப்பாதுகாப்புக் கழகத்தாரிடமும் பாவைக் குழுவினரிடமும் அளிக்கப் பெற்றன.

ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சந்நிதியில் நாடோறும் தேவாரப் பாராயணம் நடைபெற இசையுடன் ஓதவல்ல ஓதுவாமூர்த்திகள் இருவரையும் நியமித்தார்கள். ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் அவர்கள் தம் ஆட்சிகாலத்தில் ஆதீனத்துச் சிப்பந்திகள் அனைவரும் காசி யாத்திரை செல்ல உதவி செய்தருளினார்கள். நேபாளம், திருக்கேதாரம் காஷ்மீரம், சோதிர்லிங்கத்தலம் பன்னிரண்டு. ஏனைய வடநாட்டுத் தலங்கள் அனைத்தையும் ஆண்டுதோறும் காசி யாத்திரை போகும்போது தரிசிப்பது வழக்கம்.       ஸ்ரீ காசியிலுள்ள ஆதீனத்தைச் சேர்ந்த கண்ணப்பசாமி மடம் சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவில் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டது.

ஆந்திரா வெள்ளம், அஸ்ஸாம் பூகம்பம், திருவிதாங்கூர் ஸ்டேட் பஞ்சம், தமிழ் நாட்டு வெள்ளம் புயல்சேதம் இவைகளுக்கு இவர்கள் மிகத்தாராளமாக உதவிசெய்துள்ளார்கள். சீனப்படையயடுப்புகள், பாகிஸ்தான் படையயடுப்புகள் நடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு மிகத் தாராளமாகப் பொருளும் பொன்னும் கொடுத்து உதவியிருக்கிறார்கள். இந்தியாவின் தற்காப்பு நிதிக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவர்களிடம் சுமார் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்கமும் பொருளும் கொடுத்து உதவியருளினார்கள். டெல்லி கலாச்சார மன்றம், மகாத்மா ஞாபகார்த்த ஸ்தூபிநிதி, மதுரைத் தமிழ்ச்சங்கம் பொன்விழாப் போன்ற பலவற்றிற்குப் பண உதவி செய்தருளியுள்ளார்கள். தமிழ்நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் உள்ள பாடல்பெற்ற சிவத்தலங்கள், எல்லாவற்றிற்கும் சென்று தரிசித்திருக்கிறார்கள்.

ஆகவே இவர்கள் வாழ்வு சிவஞானியர்க்கு உபதேச வாழ்வாகவும்; அரசியல் ஞானிகளுக்கு அரசியல் வாழ்வாகவும், சமுதாயச் சிற்பிகளுக்குச் சமுதாய வாழ்வாகவும், புலவர்களுக்குக் கல்வி வாழ்வாகவும், முனிவர்கட்கு மோன வாழ்வாகவும் அமைந்தது எனலாம். அவர்கள் பிலவங்க ஆண்டு புரட்டாசி மாதம் 4ஆம் தேதி, புதன்கிழமை (20‡9‡1967) அகன்ற அறிவும் பரந்த அனுபவமும் ஆதீன சம்பிரதாயங்களும் நன்றாக நிரம்பப்பெற்று வயதிலே அப்பர் சுவாமிகளை ஒத்த கனிந்த மனத்து அடியவராகிய ஒடுக்கம் பெரிய பூஜை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள் அவர்களுக்கு ஞானாபிஷேகம் செய்வித்து, “”அம்பலவாண தேசிகர்” எனத் தீக்ஷா நாமமிட்டு ஞானபீடத்தில் எழுந்தருளச் செய்து 23‡9‡1967 சனிக்கிழமை ஜன்ம நக்ஷத்திரமாகிய பரணி நன்னாளிலேயே சிவபரிபூரணம் எய்தினார்கள்.

Menu Title